கனடா பொதுத் தேர்தல் வெற்றிவிழாவில் ஸ்காபுறோ பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உணர்ச்சி பொங்க அறிவிப்பு
( ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
”கனடாவில் நடைபெற்று முடிந்த இந்த பொதுத் தேர்தலில் எனக்கு கிடைத்த வெற்றியானது எனக்குரியது மட்டுமல்ல. அதற்காக உழைத்த எம் இளையோர் சமூகத்திற்கும் சொந்தமானதாகும். அவர்கள் எதிர்காலத்தில் கனடாவிற்குத் தேவையான அரசியல் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் ஆர்வத்துடன் உழைத்து வருகின்றார்கள். அவர்களில் பலர் சிறந்த அறிவாற்றல் மற்றும் செயற்பாட்டுத் திறன் ஆகியவற்றோடு எமது கட்சிக்காகவும் எமது சமூகத்திற்காகவும் உழைத்து வருவதை நான் நேரடியாக கண்டு பெருமிதம் கொண்டேன்
‘”
இவ்வாறு. நேற்று நடைபெற்று முடிந்த கனடா பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹரி ஆனந்தசங்கரி இரவு நடைபெற்ற வெற்றிவிழாவில் உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
கடந்த தேர்தலைப் போன்றே அதிக பெரும்பான்மை வாக்குகளோடு வெற்றியீட்டிய ஹரி ஆனந்தசங்கரி தொடர்ந்து பேசுகையில் ” எனது வெற்றிக்காக உழைத்த அனைத்து அன்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கும் இந்த வேளையில் எமது பிரதமர் அவர்கள் தெரிவித்தது போன்று கொரோனா தொற்றுக்கு எதிராகவும் கால நிலை மாற்றத்திற்காகவும் நாம் தொடர்ச்சியாக போராடுவோம்’ என்று தெரிவித்தார்