(27-09-2021)
மிளகாய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குத் தேவையான மிளகாயை உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டிற்குத் தேவையான மிளகாயை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டது. மிளகாய் விவசாய திட்டத்தின் கீழ் நாவலப்பிட்டி கலபொட தோட்டத்தில் 100 ஏக்கர் மிளகாய் பயிரிடும் செயற்றிட்டம் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த தலைமையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைக்கு ஆண்டுதோறும் தேவையான மிளகாய் 5,000 மெற்றிக் தொன் ஆகும்.
எனினும், நாட்டில் உற்பத்தி செய்யப் படும் மிளகாயின் அளவு 50 மெற்றிக் தொன் மட்டுமே.
எனவே, மிளகாய் இறக்குமதி செய்வதற்காக ஆண்டு தோறும் அதிகளவு அந்நியச் செலாவணி விரயமாகிறது.
இதனைத் தவிர்க்க, நாட்டிற்குத் தேவையான மிளகாயை உள்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விவசாயத் துறைக்கு அறி வுறுத்தியுள்ளார். அதன்படி, 3,000 மெற்றிக் தொன் மிளகாயைப் பயிரிட விவசாயத் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்கு(ஜனவசம)ச் சொந்தமான விளைச்சல் இல்லாத கலபொட தோட்டத்தில் நூறு ஏக்கர் தோட்டப் பகுதியில் 100 தமிழ் இளைஞர்களுக்கு பகிர்ந்தளித்து மிளகாயைப் பயிரிட முன்மாதிரியான விவசாயத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தாக அவர் தெரிவித்துள்ளார்.