ஓட்டாவாவில் அங்குரார்ப்பண உரையாற்றிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவிப்பு
“30ம் திகதி தொடக்கம் கனடாவில் அமுலுக்கு வரவுள்ள தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க தினம் பூர்வீக கனேடியர்களுக்கு மட்டுமே உரிய ஓரு நாளாகும், அது அனைத்து கனேடியர்களுக்கும் உரியது அல்ல ”
இவ்வாறு கடந்த புதன்கிழமையன்று ஒட்டாவா மாநகரில் பாராளுமன்றத்திற்கு முன்பாக அமைக்கப்பெற்ற விசேட இடத்தில் உரையாற்றிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார்.
நேற்று செப்டம்பர் மாதம் 30ம் திகதியன்று அமுலுக்கு வந்துள்ள ‘தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க தினம்’ தொடர்பான முதல் நாள் நிகழ்வில் அவர் கலந்து கொண்டு ஒரு உருக்கமான உரையை ஆற்றினார்
கனடாவின் பூர்வீக பழங்குடியினர் சார்ந்த பல தலைவர்கள் அங்கு உரையாற்றினார்கள். அவர்கள் அனைவரும் பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்பெற்ற பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு எதிராக பல விடயங்கள் அரங்கேற்றப்பட்டன.
ஏன்றும் அவர்கள் தங்கள் இனத்திற்குரிய மொழியை மறந்து விட வேண்டும் என்பதற்காக வதிவிடப் பாடசாலைகளில் கற்பித்த ஆசிரியர்களும் நிர்வாகிகளும் நிறையவே தவறுகளை இழைத்திருக்கின்றார்கள். என்று தெரிவித்தார்கள்.
மேலும் சிலர் இவ்வாறான கொடுமைகளிலிருந்து தாங்கள் தப்பிப்பிழைத்தவர்கள் என்று கூறி. தாங்கள் அனுபவித்த அதிர்ச்சி மற்றும் வலியின் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய கனடியப் பிரதமர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு தெரிவித்தார்.
“நாம் அனைவரும் – நாம் அனைவரும் – இந்த கதைகளை நம் இதயங்களில் வைத்திருக்க வேண்டும். எங்கள் புரிதலில், நாம் நல்லிணக்கத்தை பிரதிபலிப்பது போல் அல்ல, மாறாக இந்த நாட்டைப் பிரதிபலிக்கிறோம்.”
சத்தியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தொடக்க நாள் பழங்குடி மக்களுக்கான நாள் மட்டுமல்ல, அனைத்து கனேடியர்களும் “நாங்கள் செய்த தவறுகளின் உண்மை, கடந்த காலத்தில் செய்த தீமைகள்” மற்றும் வேலை பற்றி சிந்திக்க வேண்டும். மேலும் . அந்த வதிவிடப் பாடசாலைகளில் கல்வி கற்க அழைக்கப்பெற்று பின்னர் கொல்லப்பட்ட அநீதிக்கு நாம் தீர்வு காண வேண்டும்.
நூம் கனடியர்கள் ஓர் விடயத்தை மிக அவசரமாகவும் அவசியமாகவும் உடன் செய்ய வேண்டும். .. முன்னைய நாட்களில் இடம்பெற்ற கொடுமைகளில் இருந்து தப்பிப்பிழைத்தவரின் கதைகளைக் கேட்க சிறிது நேரம் ஒதுக்கு வேண்டும், இந்த நாட்டில் அவர்களின் முன்னோக்கு மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு பழங்குடி பெரியவர். அந்த கதை, அவர்களின் கதை மட்டுமல்ல எங்களது கதையும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” என்றார்.
இவ்வாறான நிலையில் முதல் நாள் ஒட்டாவா மாநகரில் பூர்வீக குடி மக்கள் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அடுத்த நாளான வியாழக்கிழமை அவர் தனது குடும்பத்துடன் பிரிட்டிஸ் கொலம்பியாவில் உள்ள டோஃபினோவுக்கு விடுமுறையாக கருதி விமானத்தில் சென்ற விடயம் பத்திரியாளர்கள் மத்தியில் விமர்சனங்களை எழுத வைத்துள்ளது கனேடியர்கள் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான முதல் தேசிய தினத்தைக் கொண்டாடிய நாளன்று பிரதமர் எவ்வாறு விடுமுறை யில் செல்ல முடியும் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள், ட்ரூடோவின் தினசரி பயணத்திட்டத்தின் அடிப்படையில் ஆரம்பத்தில் அவர் ஒட்டாவாவில் “தனிப்பட் கூட்டங்களில்” இருப்பதாகக் கூறப்பட்டாலும், பின்னர் அவர் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தின் டோஃபினோவிற்குச் குடும்பத்துடன் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
இவ்வாறு பிரதமர் மேற்கொண்ட தனிப்பட்ட பயணம் தொடர்பாக கருத் து வெளியிட்ட கனடாவின் பூர்வீக மகளிர் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லின் க்ரூலக்ஸ், பத்திரிகையாளர்களோடு வெளிப்படையாகப் பேசினார்.
இந்த குறிப்பிட்ட நாளில் பிரதமர் பயணம் செய்வது “மிகவும் வருத்தமளிக்கிறது” என்றும் கூறினார்.
“இது பழங்குடியின மக்கள் சார்ந்த மிக முக்கியமான முன்னுரிமை விடயம் என்று கூறிய பிரதமர் அவர் அரசாங்கம், அவரது நடவடிக்கை . மேற்படி அறிக்கையில் உள்ள வார்த்தைகளுடன் பொருந்தவில்லை,” என்று அவர் கூறினார். மேலும், வேறு சில தலைவர்கள் கருத்து தெரிவிக்கையில். பிரதமருக்கு இது மிகவும் இன்றைய நாளுக்கு பொருந்தாத விடயத்தை செய்து விட்டார் என்று தெரிவித்தனர்.