கனடா ‘யுகம்’ வானொலி ஆண்டு விழாவில் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் புகழாரம்’
”இங்கு வாழும் எமது தமிழ் மக்களுக்கும் மற்றும் உலகின் பல நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்குமு; தேவையான அத்தியாவசிய தகவல்களை முதன்மைச் செய்திகளாக வழங்கி வரும் யுகம் வானொலியானது ஓரு பயனுள்ள ஒலிபரப்பு ஊடகமாகவும் இணையவழி ஊடகமாகவும் இயங்கிவருதை அனைவுரும் அறிகின்றோம். அவ்வாறான தமிழ் வானொலியை நடத்தி வருகின்ற கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் அவர்களுக்கும் ரூபி யோகதாசனுக்கும் எமது பாராட்டுக்கள்”
இவ்வாறு கனடா ‘யுகம்’ வானொலி ஆண்டு விழாவில் வாழ்த்துரை வழங்கிய ஒன்றாரியோ தமிழ் பேசும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய திருவாளர்கள் லோகன் கணபதி மற்றும் விஜேய் தணிகாசலம் ஆகியோர் புகழாரம் சூட்டினர்
ஸ்காபுறோவில் மார்க்கம்-மெக்னிக்கல் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள ‘மெஜஸ்ட்டிக் சிற்றி’ தமிழ் வர்த்தக வளாகத்தில் அமைந்துள்ள இந்த யுகம் வானொலியின் ஒலிபரப்புக் கூடல் அதிகளவில் பெண் அறிவிப்பாளர்களைக் கொண்டு இயங்கிவருகின்றது.
‘மெஜஸ்ட்டிக் சிற்றி’ தமிழ் வர்த்தக வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த ஆண்டு விழாவில் வர்த்தக அன்பர்கள். ஊடக நண்பர்கள். கலை இலக்கிய நண்பர்கள் என நூற்றுக்கணக்கான அழைக்கப்பட்டவர்கள் கலந் து சிறப்பித்தனர்.
அங்கு உரையாற்றிய கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளைத் தலைவருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அங்கு உரையாற்றுகையில் “கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகையின் செய்தியாளராக பணியாற்றிய காலந்தொட்டு நான் அறிவேன். அவர் கனடாவில் காலடி எடுத்து வைத்த நாட் தொடக்கம் பல்வேறு துறைகளிலும் பிரகாசித்து வருகின்றார்.
நடிப்பு-ஓலிபரப்பு- படைப்பிலக்கியம் -அச்சு ஊடகம் என பல துறைகளில் கால்பதித்த வெற்றியாளர் ஆவார்.
அவரது ஓய்வற்ற உழைப்புத் தான் இன்று அவரது ‘யுகம்’ வானொலி உலகம் எங்கும் உள்ள தமிழ் மக்கள் ஆர்வத்துடன் செவிமடுக்கும் வானாலை ஊடகமாக விளங்குகின்றது” என்றார்.
ஏனைய கலை இலக்கிய நண்பர்களும் அங்கு உரையாற்றினார்கள். வானொலி நிலையத்தில் பணியாற்றும் ஒலிபரப்பாளர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் உட்பட அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் கௌரவிக்கப்பெற்றனர்.
படங்கள் ; சத்தியன் மற்றும் ஈசி 24 நியுஸ்; செய்தி சத்தியன்