மன்னார் நிருபர்
(13-10-2021)
மன்னார் சர்வோதய சாந்தி சேனா அமைப்பின் அனுசரனையில் இடம்பெற்ற சித்திரப் போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம் பெற்றது.
முசலி கல்வி கோட்டத்திற்குட்பட்ட ஹீனைஸ் பாரூக் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை கேட்போர் கூடத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் தலைமையில் ஊடகவியலாளர் கே.எஸ்.றிப்கான் நெறிப்படுத்தலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நாம் விரும்புவது சகோதரத்துவம், சமாதானம், அமைதி மற்றும் அன்பு எனும் தொனிப் பொருளில் இடம் பெற்ற சித்திரப் போட்டியில் ஹீனைஸ் பாரூக் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் பழைய மாணவர்கள் என பெருமளவானோர் பங்கு பற்றி இருந்தனர்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் மன்னார் தேசோதய அமைப்பின் தலைவர் திருமதி எஸ்.எஸ்.செபஸ்டியான் கலந்து கொண்டதுடன் விசேட மற்றும் சிறப்பு அதிதிகளாக மன்னார் சர்வோதய அமைப்பின் இணைப்பாளர் யூ.துஷ்யந்தன், முசலி பிரதேச செயலாளர் எஸ். ராஜீவ், சிலாவத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார, முசலி கோட்ட கல்வி பணிப்பாளர் எச்.எம்.உவைஸ், அதிபர் ஏ.சி.அஸ்மின் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அகில இலங்கை சமாதான நீதவான் எம்.எச்.குதுபு சமான், பள்ளி பரிபலான சபை தலைவர் ஏ.ஜே.முசம்மில் ஆகியோருடன் பெற்றோர் பழைய மாணவர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு ஹீனைஸ் நகர் அஹ்லுல் உஸ்ரா சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில் சர்வோதய அமைப்பின் முசலி பிரதேச மத போதகர் எம்.ஏ.எம்.ஆபித் வழிகாட்டலில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.