(மன்னார் நிருபர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மட்டத்தில் இருந்து இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து அவர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திறமையான வீர வீராங்கனைகளை தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மன்/ புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என் .நைறூஸ் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வுகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் இளைஞர் சேவை மன்றத்தின் நிர்வாக மற்றும் நிதிப் பணிப்பாளர் மனுல சமல் பெரேரா, இளைஞர் சேவை மன்றத்தின் மாகாணப் பணிப்பாளர் ஏ. அமீர், தனியார் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப். மிஹ்லார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி .பூலோக ராஜா இளைஞர் சேவை அதிகாரிகள் இளைஞர் கழக உறுப்பினர்கள், விளையாட்டு கழக வீரர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்படும் இளைஞர்கள் தேசிய ரீதியில் இடம்பெறும் போட்டியில் பங்கேற்க உள்ளதுடன் அவர்களுக்கு என தேசிய ரீதியான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது