13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் (ஸ்ரூடியோ) உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரின் மனைவியும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒளிப்படங்களை வெளியிட்டு சிறுமியை தவறானவராக வெளிப்படுத்த முற்பட்ட வேளையே அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத் தர்களின் துரித நடவடிக்கையின் காரணமாக இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றதுடன் மற்றொருவரும் கைது செய்யப்படவுள்ளார் என்று அறிய முடிகிறது.
கொக்குவிலில் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நபர், கடந்த ஒன்றரை வருடங்களாக மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரியான சிறுமியை பல தடவைகள் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனை சிறுமி யாழ். போதனா மருத்துவ மனையின் மருத்துவர்களுக்குக் கூறினார்.
இதையடுத்து கைது செய்யப் பட்ட ஒளிப்படப் பிடிப்பு நிறுவன உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறுமியை தவறானவராக சித்திரிக்கும் நோக்கில் அவரின் ஒளிப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்ற சிலர் மூலம் அவர் முயன்றி ருந்தார்.
இதையறிந்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சிறுமியின் ஒளிப்படங்களை வைத்திருந்த ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமை யாளரின் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத் துடன், இன்னொருவரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.