நவம்பர் மாதம் 13ம் திகதி சனிக்கிழமையன்று மாலை மொன்றியால் மாநகரில் நடைபெறும் ‘உதயன்; வெள்ளிவிழாவும் ‘நண்பன்’ விருது விழாவும் தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்க ரொரன்றோ மாநகரிலிருந்து சென்ற ‘உதயன்; குழுவினர் மொன்றியால் மாநகரில் உள்ள விழாக் குழுவினரோடு இணைந்து கலந்துரையாடினர்.
பின்னர் மொன்றியால் மாநகரில் இயங்கும் ரைம் எப்எம் (பண்பலை ( Time FM Radio)வானொலி நிலையத்தில் இடம் பெற்ற சந்திப்பிலும் கலந்து கொண்டனர்.
அங்கு வானொலி நிலையத்தின் அதிபர் வசி அவர்கள் மற்றும் ஒலிபரப்பாளர்கள் நிர்மலா இரத்தினசபாபதி. தயா ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து உதயன் பிரதம ஆசிரியர் அவர்களையும். எழுத்தாளர் வீணைமைந்தன் சண்முகராஜா அவர்களையும் வசி அவர்கள் விழா தொடர்பாக நேர்காணல் செய்தார்.
பின்னர் ‘உதயன்’ குழுவினர் மறைந்த தமிழிசைக் கலைஞர் வர்ண ராமேஸ்வரன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்விலும் கலந்து கொண்டு தொடர்ந்து வர்த்தக அன்பர்களையும் சந்தித்து உரையாடிய பின்னர் அன்றிரவே ரொறன்ரோ திரும்பினர்.
செய்தியும் படங்களும்; சத்தியன்