(மன்னார் நிருபர்)
(27-10-2021)
-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (27) காலை 9.30 மணி முதல் மன்னார் வாழ்வுதயத்தின் மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற்றது.
‘உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்’ எனும் கருப்பொருளில் மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் குறித்த இரத்தான முகாம் இடம் பெற்றது.
குறித்த இரத்ததான முகாமில் மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதய பணியாளர்கள், வைத்தியர்கள்,வைத்திய சாலை பணியாளர்கள் கலந்து கொண்டதுடன் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.