“தோன்றின் புகழோடு தோன்றுக அகிதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப வாழ்ந்து வருபவர் நண்பர் சாந்தா பஞ்சலிங்கம் என்றால் மிகையாகாது. நண்பர் சாந்தா பஞ்சலிங்கத்தின் வாழ்க்கையை பார்க்கும் போது எனக்கு வள்ளுவமாய் வாழும் பெருந்தகை ” என்றே எண்ணத்தோன்றுகிறது . இந்த வேளையில் எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது. அதாவது ” ஒரு முட்டை போட்டுவிட்டு கோழி ஊரெல்லாம் கொக்கரிக்குமாம் அனால் ஆமையோ ஆயிரம் முட்டை போட்டுவிட்டு அசையாமல் கிடக்குமாம். சாந்தா இரண்டாம் ரகம் அவரால் பயன் அடையாதவர்கள் என்று யாருமில்லை என்று சொல்லுமளவிற்கு உதவி என்று வந்தவர்க்களுக்கு எல்லாம் வாரி வழங்கும் நல்ல உள்ளம் கொண்டவள்ளலாக நண்பர் சாந்தா வாழ்ந்து வருகிறார். புகழை நாம் தேடிக்கொண்டு போகக்கூடாது புகழ்தான் நம்மைத்தேடி வரவேண்டும். அத்தகைய ஒருவர்தான் நண்பர். சாந்தா பஞ்சலிங்கம் புகழ் அனைத்தும் அவரை தேடிவந்த வண்ணமே உள்ளது .
இந்தக் கட்டுரையை எழுதவேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழ இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் இந்த நாட்டில் உருவாகி இந்த ஆண்டுடன் முப்பது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. சம்மேளனத்தின் வளர்ச்சியை உயர்ச்சியை பெருமிதத் தோடு பார்க்கிறேன் அதனால்தான் நானடைந்த மகிழ்ச்சியை மற்றவர்களும் அடையவேண்டும் அதாவது ”யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற வகையில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். விளைகின்றேன்
30 ஆண்டுகளுக்கு முன் கனடாவில் ஒரு சில நல்ல உள்ளங்களால் ஆரம்பிக்கப்பட்டது தான் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளம். அன்று முதல் இன்றுவரை எம்மினத்தின் வளர்ச்சிக்காக வர்த்தக உயர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வந்துள்ளது. எம்மினத்தில் சிறு தொழில் அதிபர்களாக இருந்த பலர் இன்று தத்தமது பெருமுயற்சியால் வர்த்தகத் துறையில் பெரும் புள்ளிகளாக தம்மை வளர்த்துள்ளனர். இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது வர்த்தக சம்மேளனம் அவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கி அத்தகையவர்களை ஊக்கிவித்தமைத்தான் காரணம் இந்தச் சம்மேளனத்தில் டாக்டர்கள் சட்டத்தரணிகள் கணக்காளர்கள் பொறியிலாளர்கள் என் பல்துறைசார் நிபுணர்கள் இணைந்து இருப்பதனால் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருந்து தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் ‘‘ அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பதைப்போல கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் ” ஒரு வரலாற்றை படைத்து வருகிறது. நண்பர் சாந்தா பஞ்சலிங்கம் என்ற ஒரு தனி மனிதர் இன்றுவர்த்தகத் துறையில் ஒரு விருட்சமாக வேறுன்றி நிற்கின்றார் என்றால் அவரது அசுரவளர்ச்சிக்கு அயராத உழைப்பும் நெஞ்சுறுதியும் சம்மேளனத்தின் உறுதுணையும் தான் காரணம் என்பதனால் வள்ளுவன் சொன்னதைப்போல ” எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு ” இதற்கு கைமாறாகவே நண்பர் சாந்தா பஞ்சலிங்கம் இன்று சம்மேளனத்தின் வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்பை தயங்காது தளராது வழங்கி வருகிறார் . 2004 ம் ஆண்டு ஒரு சாதாரண அங்கத்தவராக சம்மேளனத்தில் இணைந்து கொண்டார். அடுத்து சில வருடங்களில் இவருக்கு சம்மேளனம் அதாவது 2007 ம் ஆண்டு இவரது பணியை ஊக்குவிக்கும் வகையிலும் இவருக்கு “Award of excellence 2007” என்ற விருதினை இவருக்கு வழங்கி கௌரவித்தது
சம்மேளனம் தந்த ஊக்கத்தின் காரணமாக தன் Santha electrical & plumbing compa ny என்ற நிறுவனத்தை பல்வேறு வழிகளிலும் விருத்தி செய்து கொண்டார். தனியொரு மனிதனாக தனது நிறுவனத்தை கடந்த 34 ஆண்டுகளாக வளர்த்தெடுத்து வருகிறார். ”தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் ” என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு ஏற்ப தெய்வத்தைவிட தன் உடல் உழைப்பையே பெரிதும் நம்பினார். நாளொன்றுக்கு 16, அல்லது 17 மனித்தியால யங்களை தன் வேலைக்காக அர்ப்பணித்தார். அதன் பயன் இன்று ஒரு புகழ் பூத்த நிறுவன மாக அதனை உருவாக்கிக் காட்டியுமுள்ளார்.
2008 எட்டு முதல் 2009 , 2009 முதல் 2010 என இரண்டு ஆண்டுகள் Director ஆகவும் 2010 முதல் Secretary ஆகவும் 2012 முதல் 2013 Executive Vice president ஆக தெரிவு செய்யப்பட்டார். இவரது அபரிமிதமான சேவையை சம்மேளன அங்கத்தவர்கள் மட்டு மன்றி அனைவருமே பாராட்டினர். 2019 ஆம் ஆண்டு நண்பர் சாந்தா. பஞ்சலிங்கம் அவர்கள் சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இதில் எனக்கு ஒரு குட்டி பெருமை உண்டு அதாவது அவர் பதவி ஏற்று சிலமணித்துளிகளில் அவரை யுகம்
வானொலிக்காக செவ்வி எடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தச் செவ்வியில் ஒருவிடயத்தை மிக ஆணித்தரமாக அதாவது அவரது நீண்ட நாள் கனவை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதாவது கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் வாடகைக் குடியிருப்பில் த்தான் இயங்கி வந்தது. சம்மேளனத்திற்கு என்று ஒரு நிரந்தரக் கட்டிடத்தை தன் காலத் தில் வாங்கவேண்டும் என்ற ஆவலை வெளி ப்படுத்தி இருந்தார். ”எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” அவர் இதை ஒரு கற்பனைக் கதையாக் சொல்லவில்லை தன்னால் முடியும் என்ற திடமான நம்பிக்கையோடுதான் சொன்னார். சொன்னது மட்டுமல்ல அதனைச் செய்தும் காட்டினார். இதற்காக ஒரு ” கட்டிட நிர்மான ஆலோசனைக் குழு ” ஒன்றை உருவாக்கி அவர்களது சிறந்த ஆலோசனைகளின் படியும் அறிவுரைகளின் படியும் மிகத் துரிதமாக செயற்படத்தொடங்கினார். குழு அங்கத் தவர்கள் அனைவருமே இரவு பகல் என்று பாராமல் இதற்காக கடுமையாக உழைத் தார்கள். 2020 மீண்டும் தலைவராக ஏகமனதாக தெரிவானார். நண்பர் சாந்தா. பஞ்சலிங்கம் வேலைப்பளு உச்சத்தை தொட்டது. சம காலத்தில் கொரோனா என்னும் கொடிய தொற்று உலகையே உருட்டிப்போட்டது. சம்மேளனமும் இதற்கு விதி விலக்கல்ல. சம்மேளனத்தின் பல பணிகளில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டது. அனாலும் சம்மேளனம் பத்திரிகைகள் வானொலிகள் என்ற ஊடகங்கள் மெய்நிகர் (zoom ) வழியாகவும்
தன் அங்கத்தினர்களுக்கு வேன்டிய ஆலோசனைகளையும் அறிவுத்தல்களையும் வழங்கி
வழிநடத்தி வந்தது இதில் வெற்றியும் கண்டது. கட்டிடத்துக்கு என்றொரு காணி வேண்டும் என்றால் ” வெறுங்கை முலம் போடாது” என் பார்கள். பெருமளவு பணம் தேவை அதற்காக பல பயனுள்ள திட்டங்களை போட்டு அவற்றின் மூலம் நிதிதிரட்டும் செயற்பாடுகளில் அனைவரும் ஈடுபட்டார்கள். அவற்றில் ஒன்று தான் வீணை வித்துவான். ராஜேஷ் வைத்தியாவின் வீணை இசைக் கச்சேரி இதில் பெருமளவு பணம் திரட்டப் பட்டது. இந்த வேளையில்த்தான் சம்மேளனத் தின் முன் ஒரு பெரும் கேள்வக்குறி எழுந்தது சம்மேளனத் தலைவர் சாந்தா பஞ்சலிங்கத்தின் தலைமை பதவிக்குரிய காலம் இரண்டாவது ஆண்டும் நிறைவடையும் காலமும் நெருங்கி விட்டது. சம்மேளனத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைய தலைவர் ஒருவர் இரண்டாடுகள் மட்டுமே பதவியில் இருக்கமுடியும் என்ற நிலையில் நண்பர் சாந்தா பஞ்சலிங்கத்தின்
பதவியை நீடிப்பதா அல்லது புதிய தலைமை க்கு பொறுப்பை கொடுப்பதா என்ற நிலையில் சம்மேளனம் ஒரு பொறுப்பான முடிவை எடுத்தது . ”இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் ” என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப கட்டிடப்பணியை கச்சிதமாக முடிக்கக் கூடிய ஆற்றலும் ஆளுமையும் நண்பர் சாந்தாவுக்கு உண்டு என்பதனால் சாந்தா பஞ்சலிங்கத்தை மூன்றாம் முறையும் ஏகமனதாக தலைவராக தெரிவு செய்தார்கள். இது அவரது எண்ணத்திற்கும் இலட்சியத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். சம்மேளனத்தின் வரலாற்றில் ஒருவர் மூன்றாம் முறை தெரிவிசெய்யப்படுவது இதுவே முதல் தடவை. இதன் மூலம் ஒரு வரலாற்றுச் சாதனையயும் அவர் படைத்தார். சம்மேளனத்தின் ஒற்றுமையும் ஐக்கியமும் வெளிப்படையாகத் தெரிந்தது.
நிதி சேர் நடவடிக்கை
மூன்றாவது முறையாகவும் தலைவராக தெரிவு செய்யப்பட்டவுடன் தன் பணிகளை முடுக்கிவ விடத்தொடங்கினார் ” மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார்” என்ற பாடலுக்கு ஒப்ப மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்தார் தன் குடும்பத்தை தன் தொழிலை எல்லாவற்றையும் மறந்து துறந்து முழுமையான முழுமனதுடன் இதில் ஈடுபட்டார். கட்டிடம் வாங்குவதற்கு பணம் தேவை அவர்தருவார் இவர்தருவார் என்று காலம் தாழ்த்த விரும்பாத நண்பர் சாந்தா பஞ்சலிங்கம் அதற்கான பணத்தை அதாவது 150000 டொலர்களை வாரி வழங்கினார் இதற்கு ஒரு மனம் வேண்டும் அது பிறவியில் வரவேண்டும் ” சித்திரமும் கைப்பழக்கம் செந் தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம் நடையும் நடைப் பழக்கம் நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்” என்ற ஒளவையின் பாடலுக்கு ஏற்ப தன் பிறவிக் குணத்தால் இந்த நற்காரியத்தை
முன்னுதாரணமாக கொடுத்து உதவினார். சாந்தா பஞ்சலிங்கத்தின் உயர்ந்த குறிக் கோளையும் கொள்கையையும் அறிந்த இளம் தொழில் அதிபர் Trinity Enterprise நிறுவன த்தின் அதிபர் DUNSTAN PETER அவர்கள் ” உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு ” என்பது போல் இந்த அருமையான திட்டத்திற்கு பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கியது மட்டுமன்றி 120000 டொலர்களை வாரி வழங்கி னார். அதுவுமன்றி தன நண்பர்களிடமும் பெருந்தொகை பணத்தை திரட்டிக் கொடுத்தார். இந்த வேளையில் நாம் இருவரை மறக்க முடியாது அவர்கள் சம்மேளனத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களாக மட்டுமல்ல அதன் உருவாக்கத்திற்கும் காரணமாக இருந்தவர்கள் கலாநிதி வசந்தன் ஸ்ரீ கிருஷ்ணன் நண்பர்கள் நண்பர் சாந்தாவுக்கு பலவழிகளிலும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வழிநடத்தி வந்திருக்கிறார். இத்தகைய அனைவரது ஒத்துழைப்போடும் ஆலோசனை கலோடும் தன் கருமங்களை நிறைவேற்றி வந்துள்ளார் சாந்தா பஞ்சலிங்கம்
யார் இந்த சாந்த பஞ்சலிங்கம்
கல்விவளமும் கலைவளமும் கலந்துறையும் பெரும்பதியாம் உரும்பிராய் என்னும் உன்னத மண்ணில் பிறந்து தன் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் பெருமகனாக வாழ்ந்து வருகிறார் சாந்தா பஞ்சலிங்கம். கனடாவில் CTBC யில் நன்கு அறியப்பட்ட திருமதி. பஞ்சலிங்கம் அம்மாவின் செல்லப்பிள்ளைகளில் இவரும் ஒருவர். உருப்பிராய் பள்ளிகளின் வளர்சிகளுக்கு எப்பொழுதும் உதவி வந்திருக்கிறார். அதுவுமன்றி ஸ்காபுறோ வைத்திய சாலைக்கு திரட்டப்பட்ட 30.000 டொலர்களில் 10.000 டொலர்களையும் டொரோண்டோ பலகலைக்கழக தமிழ் இருக்கைக்கு எனத்திரட்டப்பட்ட பணத்தில் 10.000 டொலர்களையும் தந்துதவினார். இங்குள்ள ஊடகங்கள் ஊர்ச் சங்கங்கள் அமைப்புக்கள் ஆகியவற்றிற்கும் அள்ளிக் கொடுத்த வள்ளலாக வளம் வருகிறார் உங்களைப்போல எனக்கும் நண்பர் சாந்தா பஞ்சலிங்கத்தை மிகவும் பிடிக்கும். சாந்தா என்னைக்கவர்வதற்கு இன்னும் ஒரு சில காரணங்கள் உண்டு. அவற்றில் முதலாவது காரணம் 1994 ம் ஆண்டு என்னை மெய் சிலிர்க்க வைத்த நிகழ்ச்சி நண்பர் சாந்தா அவர்கள் தன்னுடைய குருவாக தனக்கு இந்த பிளம்பிங் தொழிலை கற்றுத்தந்த ஆசானை தன் குருவான திரு. பொன்னுத்துரை ஆசிரியரை அழைத்து கௌரவித்தது என் நெஞ்சைவிட்டு இன்றுவரை நீங்கவில்லை இந்த நன்றியுணர்வே இன்று சாந்தாவை பல வெற்றிகளை தொடவைத்திருக்கிறது என்றால் மிகையல்ல . ‘‘ காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது ” அன்று தனக்கு அவர் செய்ய உதவிதான் தன வளர்ச்சிக்கு வித்திட்டது என்ற நன்றியுணர்வோடு நடந்த விழா ஏனையவர்களுக்கும் ஓர் நல்ல எடுத் துக்காட்டு. இன்று 34 வது ஆண்டாக வெற்றி
கரமாக அவரால் நடத்திவரப்படும் SANTHA ELECTRICAL & PLUMBING 6160TM நிறுவனம் மட்டுமல்ல மு கு ஊ மற்றும் வுயுஊழு டீநுடுடு போன்ற பெரும் நிறுவனங் களின் கிளை நிறுவனங்களின் பங்குதார ராகவும் அவற்றை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார். இத்தனை சிறப்புக்கள் அவருக்கு இருந்தாலும் எப்பொழுதும் அவரிடம் இல்லாதிருந்தது தலைக்கனமே. பைபிளில் ஓர் அழகான வாக்கியம் இருக்கிறது “தன்னைத் தாழ்த்துபவன் உயர்த்தப் படுவான்‘ என்பதைப் போல அவர் என்றும் எப்போதும் தலைக்கனம் கண்டு யாருடனும் நடந்து கொண்டதில்லை அதுவுமன்றி அடைந்த 26 ஆண்டுகளில் ஒரு நாள் ஒரு முறையேனும் யாருடனும் கோபித்துக் கொண்டதையோ சினந்து கொண்டதையோ நான் கண்டதேயில்லை அத்தகைய அன்புள்ளம் கொண்டவர் அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு உள்ளம் கொண்டவர் நண்பர் சாந்தா.
எவரை எப்போது பாராட்ட வேண்டும் எவரை எப்போது பாராட்ட வேண்டும் என்று ஒரு பட்டியலே தருகிறார் ஒளவைப்பிராட்டியார் ”நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதி த்தல் ஆசானை எவ்விடத்தும் அப்படியே வாச மனையாளை பஞ்சணையில் மைந்தர் தமை நெஞ்சில் வினையானை வேலை முடிவில்” அதாவது ஒரு செயல் திறந்மிக்கவரை அவரது செயல்கள் நிறைவடைந்தவுடன் பாராட்ட வேண்டுமாம் அதனால்த்தான் இந்தப் பாராட்டு. அதுவுமன்றி நண்பர் சாந்தா பஞ்சலிங்கத்திற்கு இன்னுமொரு சிறப்புண்டு. ஆருயிர்த் துணைவனாக அன்புத் தந்தையாக ”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ” என்ற குறளுக்கு ஒப்ப இனிய குடும்பத்தாருடன் தன் வாழ்க்கையை இனிதுற நடத்தி வருகிறார். ஒரு ஆணின் வளர்ச்சிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள்
என் அருமைச் சகோதரி திருமதி மலர் சாந்தா மிகப் பொருத்தமானவர் ”மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் “அதாவது இல்லற வாழ்வுக்குர பிய நற்பண்புகள் மனைவியிடம் இல்லையென்றால் ஒருவனது வாழ்க்கையில் வேறு எத்தனை சிறப்புக்கள் இருந்தும் பயன் ஏதும் இல்லை அந்தவகையில் தன் கணவருடைய செயற்பாடுகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்து செயற்படுபவர் தங்கை மலர் என்றால் மிகையல்ல. முக் கனிகள் போலும் முத்தான மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்கு என அருமையான வாழ்வை “தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் ” என்று போற்றும் வண்ணம் சிறந்த கல்வி கேள்விகளில் உயரவைதுள்ளார் சாந்தா. அவரது மூன்று அன்புப் பிள்ளைகளும் அவர் வழியே ”மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல் ‘‘ இப்படிப்பட்ட பிள்ளைகளை பெற இந்தத் தாய் தந்தையர்கள் என்ன புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்று சொல்ல வைக்க வேண்டுமாம் அந்தப் பிள்ளைகளும் இதனை செவ்வனே செய்து வருகிறார்கள் இத்தகைய ஒருநிறைவான வாழ்க்கையை வாழும் நண்பர் சாந்தாவை வாழ்த்தி ஒரு பாடலோடு நிறைவு செய்கிறேன்.
ஆபத்திற்குதவாப் பிள்ளை அரும் பசிக் உதவா அன்னம் தாகத்தை தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டீர் கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன் பாபத்தை போக்கா தீர்த்தம் பயனில்லை ஏழும் தானே இப்படி பயனில்லாத வாழ்க்கையை வாழ்வதை விட தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்கின்ற நண்பர் சாந்தா.பஞ்சலிங்கம் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ் வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
கணபதி ரவீந்திரன்