(மன்னார் நிருபர்)
(29-10-2021)
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) மற்றும் மீன்பிடி அமைச்சும் இணைந்து மன்னார் ஈச்சளவக்கை குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக என 2 லட்சம் இறால் குஞ்சுகள் விடும் நிகழ்வு இன்றைய தினம் (29) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கொரோனா தொற்று காலத்தில் கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அதேவேளை நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிப்பதற்காக வும் மேற்படி செயற்திட்டன் மெசிடோ நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றிற்கான இறால் குஞ்சுகளை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிறாடொ, மீன்பிடி அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்பாளர், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் மன்னர் மெசிடோ நிறுவன ஊழியர்கள் மற்றும் ஈச்சளவக்கை நன்னீர் மீன்பிடி சங்கத்தின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
அதே நேரம் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட குளங்களில் இறால் குஞ்சுகள் விடுவதற்கான ஏற்பாடுகள் மெசிடோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது