(30-10-2021)
வவுனியா புதியசின்னக்களம் பகுதியில் மர்மமான முறையிலே பலியான நல்லின மாடுகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா புதிய சின்னக்குளம் பகுதியில் இடம் பெற்ற இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா நொச்சிமோட்டையை சேர்ந்த கால்நடை வளர்ப்பாளரின் மூன்று பசு மற்றும் ஒரு நாம்பன் மாடு இரண்டு நாட்களிற்கு முன் மேச்சலுக்கு சென்ற நிலையில் காணாமல் போய்யுள்ளன.
இந்நிலையில் நேற்றையதினம் வயலுக்கு சென்ற சிலரால் மர்மமான முறையில் பலியான நான்கு மாடுகளை அவதானித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து உரிமையாளரினால் குறித்த சம்பவம் தொடர்பாக மாமடு பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மாடுகள் வேட்டைக்காக பயன்படுத்தப்படும் சட்ட விரோத மின்சார இணைப்பில் அகப்பட்டு இறந்திருக்கலாம் என்ற நிலையில் மாமடு பொலிஸாரினால் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த மாடுகள் சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான என்பது குறிப்பிடத்தக்கது.