தனது கடவுச் சீட்டை தபாலில் இழந்த இந்திய இளைஞர் ஊடகங்களுக்கு விசனத்துடன் தெரிவிப்பு
“கனடா போஸ்ட் எனப்படும் தேசியதபால் சேவை நிறுவனத்தை இனி நான் பயன்படுத்த மாட்டேன். ஓட்டாவாநகரத்தில் இயங்கும் கனடிய குடிவரவு திணைக் களத்திலிருந்து எனது கடவுச் சீட்டைதிரும்பப் பெற்றுக் கொள்வதற்காக நான் “எக்ஸ்பிரஸ் போஸ்ட் எனப்படும் துரிதசேவைக்கு கட்டணம் செலுத்தினேன். எனது கடவுச்சீட்டு கனடா போஸ்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது என உறுதியானது. அவர்கள் எனது கையொப்பத்தை பெற்றுக்கொண்டே அதனை எனக்கு கையளித்திருக்க வேண்டும். ஆனால் தபால் ஊழியர்கள் அவ்வாறு செய்யவில்லை. யாரோ தவறான ஒருவர் கையில் கனடா போஸ்ட் ஊழியர் கொடுத்து விட்டார் அது ஒரு கடவுச் சீட்டுஎன்பதால் அதிககவனத்துடன் எனக்கு விநியோகம் செய்திருக்க வேண்டும் கடவுச் சீட்டுஎன்பது ஒரு முக்கியமான ஆவணம”;.
இவ்வாறு ஊடகங்களின் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார், தனதுகடவுச் சீட்டை தபாலில் இழந்த இந்திய இளைஞரானமாணவர் பைபன் ஜோசப்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாணவராக இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து கனடாவுக்கு வந்த பைபன் ஜோசப் ஹலிபெக்ஸ் நகரத்தில் உள்ள பிரெட்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
இப்போது அங்கு வசிக்கும் அவர், ஜனவரி மாதம் இந்தியா சென்று தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக ஒரு விமானப் பயணத்தைபதிவு செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பே, அது 2000 டாலர்கள் மேல் செலுத்தி விமானச் சீட்டைப் பெற்றார, ஆனால் தற்போது அவரது கடவுச்சீட்டு தொலைந்து போன காரணத்தால் அவரால் இந்தியா செல்ல முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
தற்போது தனது கடவுச்சீட்டை இழந்துள்ள பைபன் ஜோசப் தற்காலிக விசாவிற்கான விண்ணப்பத்தையும் அவர் தனது அசல் இந்திய கடவுச்சீட்டையும் கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்திற்கு அனுப்பினார், அது கோரிக்கையை ஏற்று, கனடா போஸ்ட் கண்காணிப்பு எண்ணுடன் சரியான முகவரிக்கு திருப்பி அனுப்பியது.
“நான் இதை எதிர் பார்க்கவே இல்லை, ” என்று பைபன் ஜோசப் நேற்று முன்தினம் புதன்கிழமை பெட்ஃபோர்டில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர் தொடர்ந்து தனது கடவுச் சீட்டுதொலைந்து போன விடயத்தை செய்தியாளர்களிடம் விபரமாகக் கூறினார்.
“நான் கடந்தபல நாட்களாக எனது கடவுச்சீட்டு வந்து விடும் என்று காத்திருந்தேன். குடிவரவு திணைக்களத்திலிருந்து எனது கடவுச்சீட்டு அக்டோபர் 18 அன்று அனுப்பப்பட்டதாக தபால் அலுவலகம் குறிப்பிட்ட போது நிம்மதியடைந்தேன்
ஆனால் எனக்கு அது கிடைக்காத படியால் அதைத் திரும்பப் பெறநான் எல்லாவற்றையும் செய்தேன் இந்த விடயத்தை கனடா போஸ்ட்டில் முறைப்பாடு செய்து அவர்கள் விசாரணை நடத்துகின்றார்கள். ஆனால் பயனில்லை’ என்று தெரிவித்த பைபன் ஜோசப் தொடர்ந்தும் கவலையுடன் தனது சங்கடத்தை விபரித்தார்.
அவரும் பொலிஸைத் தொடர்பு கொண்டார், ஆனால் அவர்கள்; அதைக் கேட்கவில்லை, கவனிக்கவும் இல்லை. வேறுயாராவது தவறுதலாக அதைப் பெற்றாரா என்று பார்க்க அக்கம் பக்கத்தினர் மத்தியில் விசாரித்துப் பார்த்தார். அதுவும் பலனளிக்கவில்லை.
அவர் முகநூல் போன்ற சமூக சமூக ஊடக குழுக்களில் இடுகையிடப்பட்டு, மாற்று பாஸ்போர்ட்டைப் பெறுவதைப் பார்த்தார், ஆனால் அதற்கு குறைந்தபட்சம் நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும் என்றார்கள் ஆனால் அவரது பயணத் திகதி நெருங்கிக் கொண்டிருக்கையில். தபால் நிலையத்தை பலமுறை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் உரையாடல்கள் சரியாக நடக்கவில்லை என்றும் பைபன் ஜோசப் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “கனடா போஸ்ட்; வாடிக்கையாளர் சேவைப் பகுதியில் பணியாற்றுகின்றவர்கள் சிலர் என்னிடம் பேசியவிதம் மிகவும் அருவருப்பானது, ஏனென்றால் நானா தவறு செய்தேன், அவர்கள் தானே ;” என்றும் கடவுச் சீட்டை இழந்துள்ள பைபன் ஜோசப் கூறினார்.