கனடாவில் புகழ்பெற்ற மிருதங்க பயிற்சிக் கலைக் கூடமாகத் திகழும் ‘மிருதங்க சேஸ்த்திரம்’ நிறுவனத்தின் ஸ்தாபகரும் குருவுமாகிய வாசுதேவன் இராஜலிங்கம் அவர்களின் மாணவர்களும் திரு திருமதி வித்தியானந்தன் தம்பதியின் புதல்வர்களுமான தர்ஷிகன் மற்றும் சஞ்ஷிகன் ஆகிய சகோதரக் கலைஞர்களின் மிருதங்க அரங்கேற்றம் எதிர்வரும் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் 733 பேர்ச்மவுண்ட் வீதி ஸ்காபுறோ என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த அரங்கேற்றத்திற்கு ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்கின்றார்.
கோவிட்-19 தாக்கம் ஆரம்பித்த பின்னர் கனடாவில் நடைபெறும் முதலாவது மிருதங்க அரங்கேற்றம் இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது