கனடாவின் மிசிசாகா நகர் வாழ் திரு-திருமதி மதனதீபன் -நிரோஷா தம்பதியினரின் செல்வப் புதல்வி இஷானியாவின் 2வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மண்ணின் புதுக்குடியிருப்பில் முதியோர்களுக்கான கௌரவிப்பு, சிறுவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் மாணவர்களுக்கான மிதிவண்டி வழங்கல் ஆகிய பயனுள்ள நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம்பெற்றன.
கடந்த 19-10-2021 அன்று நடைபெற்ற மேற்படி அற்புதமான நிகழ்வில் அங்கு கலந்து கொண்ட முதியோர்கள் சிறுவர் சிறுமியர் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட அனைவரும் மிகவும் அன்புடன் உபசரிக்கப்பெற்று மகிழ்ச்சியுடன் கௌரவிக்கப்பெற்றன. சிறுவர் சிறுமியர்கள் மகிழ்ச்சியுடன் இல்லம் ஏகினர்
(படங்கள்:_ செந்தூரன்- வவுனியா)