(மன்னார் நிருபர்)
(16-12-2021)
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேச செயலகமும், மாந்தை மேற்கு பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச கலாசார விழா நேற்று புதன்கிழமை (15) மாலை மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கே.அரவிந்தராஜ் டெனிசியஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார்.
-மேலும் விருந்தினர்களாக மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் இராமநாதன் வவுனியன் ஆதி அருணாச்சலம்,மடு வலயக்கல்வி பணிப்பாளர் தர்மலிங்கம் முகுந்தன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
-இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,தெரிவு செய்யப்பட்ட மாந்தை மேற்கு களைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
-மேலும் இடம் பெற்ற கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.