(17-12-2021)
சிவனொளிபாத மலை புனித யாத்திரை நாளை(18) ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இன்று(17) பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொளி பாதமலை விகாரையில் இருந்து புனித தந்த தாது பெரஹெர மூலம் சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இன்று(17) காலை 5 மணிக்கு பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொளிபாதமலை விகாரையில் இருந்து புனித தந்த தாது பெரஹெர மூலம் நான்கு வீதிகள் ஊடாக சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பலாங்கொடை பொகவந்தலாவ வீதி, இரத்தினபுரி அவிசாவளை ஹட்டன் வீதி, இரத்தினபுரி பலாபந்த வீதி, இரத்தினபுரி குருவிட்ட ஆகிய நான்கு வீதி வழியாக பெரஹெர சிவனொளி பாதமலையை நோக்கி சென்கிறது.
மேற்படி பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொளிபாதமலை விகாரையில் இருந்து புனித தந்த தாது சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பு பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொளிபாதமலை விகாரையில் இன்று(17) அதிகாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலணி லொக்குபோத்தகம, மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் மஞ்சுலா இதிகாவெல உட்பட பெருந்திரளான பக்த அடியார்கள்; கலந்து கொண்டனர்.