(மன்னார் நிருபர்)
(25-12-2021)
மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி வெகு சிறப்பாக இடம்பெற்றது.
-பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் திருப்பலி இடம் பெற்றது.
-இதன் போது அருட் சகோதரர்கள் ,அருட்கன்னியர்கள் , குருக்கள் உட்பட பங்கு மக்கள் மகிழ்வுடன் கலந்து கொண்டு இயேசு பாலனின் ஆசீர் பெற்றுக் கொண்டனர்.
சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக இடம் பெற்றதோடு, பொலிஸ் இராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில் திருப்பலி இடம் பெற்றது.