இலங்கையில் மக்கள் மீதான பொருளாதார சுமை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதக்காலத்தில் மாத்திரம் நாட்டில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மக்கள் நாளாந்த வாழ்க்கையில் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக 2022ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் அரசப் பணியாளர்களுக்கோ அல்லது தனியார் துறையினருக்கோ வேதன உயர்வுகள் எவையும் பரிந்துரைக்கப்படவில்லை.
எனினும் மக்கள் பிரதிநிதிகள் கிராம மட்டங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் முகமாக பல ரில்லியன் ரூபாய்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. சமாந்தரமாக பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது.
அரிசி,எரிபொருள், எாிவாயு, உட்பட்ட அனைத்து பொருட்களிலும் இந்த அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றும் இறக்குமதி பால் மாக்களின் விலை கிலோ ஒன்றுக்கு 150 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் தொடர்பில் தொடர்ந்தும் அதிருப்தி நிலை வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.