கடந்த 22-12-2021 திகதி புதன்கிழமை, கல்லூரி அதிபர் திருமதி அம்பிகை சிவஞானம் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இலண்டனில் வசிக்கும், அளவெட்டி திரு. சிவசிதரம்பரநாதன் சிவகணேசன் அவர்கள், திறனாய்வு வகுப்பு அமைவதற்கு வேண்டிய நிதி உதவியை இலண்டன் இரத்தினம் நிதியத்திற்கு வழங்கியிருந்தார். திரு. கணேசன் அவர்களின் தாயார் திருமதி. மங்கையற்கரசி சிதம்பரநாதன் இராமநாதன் கல்லூரி பழைய மாணவியாவார்.
இரத்தினம் நிதியம் இதுவரையில் 100ற்கு மேற்பட்ட திறனாய்வு வகுப்புகளை நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளது குறிப்பிட்டத்தக்க விடயமாகும். இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. யமுனா இராஜசீலன் அவர்கள் நாடா வெட்டி வகுப்பறையைத் திறந்து வைத்தார்.
அவர் பேசும் பொழுது வருங்கால சூழலில் கணினி உபயோகத்தின் முக்கியத்துவம் பற்றியும் திறனாய்வு வகுப்புகளின் உதவியால் வசதியில்லாத பிள்ளைகளும் பயன் அடைந்து வாழ்கையில் முன்னேறுவார்கள் எனக் குறிப்பிட்டார்.
திரு செல்லையா மோகநாதன், கோட்டக் கல்வி அலுவலகம், திரு கிருஷ்ணகுமார் – IMHO, டாக்டர் ஆதித்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதிபர் அவர்கள், இரத்தினம் பவுண்டேஷனுக்கும் விருந்தினருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.