(31-12-2021)
காத்தான்குடி கடலில் நேற்று (30) காலை மீன்பிடிக்கச் சென்ற சிறிய மீன்பிடி படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அதில் சென்ற இரு மீனவர்களும் உயிர் தப்பிய நிலையில் கரையை வந்தடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த இரு மீனவர்களும் நேற்று (30) காலை 6 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடலுக்கு சிறிய மீன்பிடி படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இதன் போது கடலில் சுழல் காற்று ஒன்று திடீரென வீசியதால் அந்த மீன்பிடி படகு கவிழ்ந்த நிலையில், அதில் சென்ற இரு மீனவர்களும் கடலில் மூழ்கிய நிலையில் அம் மீன்பிடி படகில் தொங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
இதனை அறிந்த கரையில் நின்ற மீனவர்கள் மீன்பிடி படகொன்றில் கடலுக்கு சென்று குறித்த இரு மீனவர்களையும் காப்பாற்றிக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலில் மூழ்கிய சிறிய மீன்பிடி படகை எடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.