யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கொழும்பு, ஓமான், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி வைத்திலிங்கம்
அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – உத்தமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாகலிங்கம் (Health Inspector, Sri Lanka, Public Health Officer, Palace Medical Services, Oman) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
இந்திராணி, காலஞ்சென்ற சாந்தினி, சந்திரகுமார், சிந்தியா, பிறேமா, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற வேதவனம் விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு பெறாமகளும், காலஞ்சென்ற பார்வதிதேவி நல்லைநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும், ஸ்ரீதரன் அவர்களின் அன்புப் பெரியம்மாவும், கருணாநிதி, சுனித்தா, குமரகுருபரன், குணசேகர், கீதாஞ்சலி, ஷிராணி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான மகாலஷ்மி தாமோதரம்பிள்ளை, பேரானந்தம் தர்மலிங்கம், குணபூபதி கந்தசாமி, நல்லைநாதன் செல்லப்பா ஆகியோரின் அன்பு மச்சாளும், காலஞ்சென்ற A.R.பொன்னம்பலம் அவர்களின் மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் சொக்கலிங்கம் மற்றும் குமாரலிங்கம் சொக்கலிங்கம் ஆகியோரின் அருமை அக்காவும்,
இராஜலஷ்மி இராசையா, காலஞ்சென்ற அன்னலஷ்மி நவரட்ணம் மற்றும் விஜயலஷ்மி அரசரட்ணம் ஆகியோரின் ஆசை மச்சாளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சின்னதம்பி, தர்மலிங்கம் நாகமுத்து மற்றும் கந்தசாமி சின்னகுட்டி ஆகியோரின் அன்புச் சகலியும்,
ராதிகா, இந்துஜா, பிரணவன், வைதீகன், ஜானகி, மயூரி, Dylan, Brandon, மீரா, வசந்த பிரகாஷ், கமல், மோகன், செந்தூரன், ஷமித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும், Bianca, சமீரா, Dhurva ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08–01–2022 சனிக்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1:00 மணி தொடக்கம் 3:00 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பின்ன ர் பி.ப 3:30 மணிக்கு Forest Lawn Mausoleum & Cremation Centre (4570 Yonge St, North York, ON M2N 5L6) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:
இந்திரா – மகள் : (647) 718-5858
சந்திரன் – மகன் : (416) 953-1570
சிந்தி – மகள் : (416) 843-3284
பிறேம் – மகள் : (416) 627-8237
ஜெயா – மகன் : (416) 540-0362