கோவிட் -19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட மறுத்ததற்காக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சுகாதாரத் துறை சார்ந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய மருத்துவமனைகள் அல்லது பிற பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவைப் பிறப்பிக்கும் முறையை தவிர்க்குமாறு ஒன்ராறியோ மருத்துவமனைகளின் சங்கம் மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்களையும் மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சரையும் வேண்டியுள்ளன.
எனினும். பொதுத் தாதியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் ஓமிக்ரான் நோய்த் தொற்று அறிகுறிகளுடன் வீட்டிலேயே இருப்பதாலும் அல்லது தனிமைப்படுத்தப்படுவதாலும் ஒன்றாரியோ மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்வதில் நாம் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றோம்.; என்றும் ஒன்றாரியோ மருத்துவமனைகள் சங்கம் எச்சரிக்கிறது.
மிக எளிமையாக, பல பணியாளர்கள் தங்களுக்கும் தங்கள் நோயாளிகளுக்கும் ஏற்படும் ஆபத்தைக் கருத்திற்கொண்டு மருத்துவமனைக் கொள்கைகளுக்கு இணங்காத குறைந்த எண்ணிக்கையிலான சுகாதாரப் பணியாளர்களுடன் பணிபுரிய மறுப்பார்கள், இதனால் மருத்துவமனைகள் தற்போது எதிர்கொள்ளும் பணியாளர்கள் சவால்களை பெரிதும் அதிகரிக்கிறது. ,” என சங்கத்தின் தலைவர் அந்தோனி டேல் ஒன்றாரியோ மாகாணத்தின் தொழில் அமைச்சர் மான்டே மெக்நாட்டனுக்கு நேற்று வியாழக்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது .
இவ்வாறிருக்க. நோர்த் யோர்க்கில் உள்ள ஓரு மருத்துவ நிலையம் தடுப்பூசிகளை மறுத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு மருத்துவமனைகளை ஊக்குவித்தது.
தற்போதைய ஓமிக்ரான் அலையின் தீவிரத்தை மேற்கோள் காட்டி, மாகாணம் முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, நயாகரா நகரத்தின் நோயாளிகளின் அதிகரிப்புக்கு பதிலளிக்கும் பொறுப்பின் பிரகாரம் தாங்கள் கவனம் செலுத்துவதற்கான அவசர தேவை இருப்பதாகக் அங்குள்ள வைத்தியசாலை நிர்வாகம் மாகாண அரசிற்கு அறிவித்துள்ளது
“எங்கள் மருத்துவமனையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பணியாளர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், பின்னர் தீர்மானிக்கப்படும் நேரத்தில் நாங்கள் செயல்படுத்துவோம்” என்று ரொறன்ரோ வைத்தியசாலை ஒன்றின் தலைமை நிர்வாகி லின் குரேரிரோ கூறினார், இங்கு எந்த ஊழியர்களும் இதுவரை பணிநீக்கம் செய்யப்படவில்லை மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பணியாளர்களுக்கான சோதனைகளை தொடர்ந்து நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்டாரியோவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். கீரன் மூர், இது தொடர்பான தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது. உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்து, இந்த நிபந்தனை கட்டாயமானதா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை அந்தந்த மருத்துவமனைகளுக்கு விட்டுவிட்டதாக நேற்று வியாழக்கிழமை கூறினார்.