கடந்த 30-12-2021 அன்று மொன்றியால் விமான நிலையத்திலிருந்து பிரத்தியேக வாடகைக்கு அமர்த்தப்பட்ட Sunwing விமானத்தின் உள்ளே வான்வெளியில் கட்டுப்பாடுகளை மீறி ‘கும்மாளம்’ போட்ட புத்திஜீவிகளை கனடிய பிரதமர் பகிரங்கமாகக் கண்டித்துள்ளார் தங்களை புத்திஜீவிகள் என்று அறிமுகம் செய்த மேற்படி பயணிகள் குழுவின் தலைவர் தற்போது ஊடகங்களுக்கு முன்பாக தோன்ற மறுப்பதாகவும் அறியப்படுகின்ற நிலையில் மேற்படி விமானப் பயணத்தின் போது அதில் பயணம் செய்தவர்கள் மது அருந்தியும் போதை தரும் புகை பிடித்தும் ‘கும்மாளம்’ போட்டு கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை மாத்திரமல்ல. சரவதேச விமானப் பயணங்கள் தொடர்பான சட்டங்களையும் மீறியுள்ளதாகவும் ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது சம்பவம் தொடர்பாக தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட கனடியப் பிரதமர் பின்வருமாறு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். கொரோனாவை எதிர்கொள்வதற்காக வர்த்தக இழப்பு, மற்றும் பாடசாலைகளை மூடுதல் போன்ற கட்டுப்பாடுகளுக்கு கனடா தேசம் தன்னை உட்படுத்திக்கொண்டுள்ள நிலையில், எந்த விதிகளையும் மதிக்காமல் விமானத்தில் ஒரு கூட்டம் உல்லாசமாக கனேடிய சமூக ஊடக பிரபலங்கள் என்ற பெயரில் நடத்திய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் மட்டுமல்ல உலகெங்கும் இலட்சக் கணக்கானவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்கள் மற்ற கனேடியர்களைப் போல, தானும் அந்த விமானத்திற்குள் இடம்பெற்ற உல்லாசமான கொண்டாட்டத்தைப் பார்க்க நேர்ந்ததாகவும் வீடியோவைப் பார்த்ததாகவும், அதனால் தான் கடும் எரிச்சலடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக எவ்வளவு சிரமப்படுகிறார்கள், கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் கூட குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதைக் கூட கட்டுப்படுத்திக்கொண்டு, முகக்கவசங்களை அணிந்துகொண்டு மக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள பாடுபடும் நேரத்தில், இப்படி தங்கள் சக குடிமக்களுக்கும், விமான ஊழியர்களுக்கும் அபாயகரமான சூழலை ஏற்படுத்தியுள்ள இவர்களது செயல் முகத்தில் அறைவதற்கு சமமான அவமதிக்கும் செயலாகும் என்று விசனம் தெரிவித்துள்ளார் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. மேற்படி விமானப் பயணத்தின் போது சட்டங்களை மீறியவர்களும் அதனை ஏற்பாடு செய்தவர்களும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது என்று கனடிய மத்திய போக்குவரத்து அதிகார சபை சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயணம் செய்த சிலர் அதை ஒளிப்படமாக்கி துணிச்சலுடன் பகிரங்கப்படுத்தியதையும் கண்டித்த அந்த அதிகாரி அவர்கள் மீதான விசாரணை ஒன்றும் தற்போது ஆரம்பமாகியுள்ளது என்றும்; தெரிவித்துள்ளார் அத்துடன், ஒரு குற்றச்செயலுக்கு 5,000 கனேடிய டொலர்கள் வீதம், கடுமையான அபராதமும் அந்த சட்டங்களை மீறிய பங்கேற்றவர்கள் செலுத்தவேண்டிவரும் கனடிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ஓமர் அல்காபரா ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றிய கனடிய அரசின் போக்குவரத்து அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் விமானப் பயணத்தில் சம்பந்தப்பட்டவர்கள். அனைவரும் முகக்கவசம் அணிவது முதலான எவ்வித விமான கட்டுப்பாடுகளையோ, கொரோனா கட்டுப்பாடுகளையோ பின்பற்றவில்லை. அத்துடன், மது அருந்திக்கொண்டும், கஞ்சா புகைத்துக்கொண்டும் நடுவானில் ஆட்டம் போட்டுள்ளார்கள். இநதச் செயல்; முழுமையாக கனடியர்களை அவமதிக்கும் ஓரு செயலாகும் மேலும் இந்த சட்டத்தை மீறிய செயல்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து கடும் சர்ச்சை உருவாகவே, கனடிய அரசாங்கம் அவர்கள் மீது அபராதம் முதல் சிறைத்தண்டனை வரையிலான கடும் நடவடிக்கைகள் எடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.