கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட மற்றும் தற்போதைய Covid19 காரணமாக வாழ்வாதாரம்பாதிக்கப்பட்ட பொருளாதார ரீதியாக பின்தங்கிய
குடும்பங்களில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள திரு முறிகண்டி இந்து வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் 100 மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக கற்றல் உபகரணங்களை
தந்துதவுமாறு பாடசாலை அதிபரினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம்மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாணவரகளுக்கு தலா ரூபா 800 பெறுமதியில் 100 மாணவர்களுக்கு ரூபா 80,000 பெறுமதியான அப்பியாச கொப்பிகள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தால் அன்பளிப்பாக வழங்கி வைக்கபட்டுள்ளது.
இன் நிகழ்வில் மு/திருமுறிகண்டி இந்து
வித்தியால,யம், அதிபர் திரு. இரத்தினதுரை – பேரின்ப
நாதன், மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகளை வழங்கி வைத்தார்