(14-01-2012)
எனது மகன் ஒரு பொறியியலாளர் ,அத்துடன் ஒரு எழுத்தாளரும் கூட இன்று வரை சிறையில் வாடுவதாக , தமிழ் அரசியல் கைதியின் தந்தையொருவர் கவலை தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,யாழ்ப்பாணத்தில் விடுதலை பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்துக்கு முன்பாக அமைந்துள்ள,தமிழர் ஆராய்ச்சி படுகொலை நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில்,.
நான் யாழ்ப்பாணம் அல்வாயில் வசிக்கின்றேன்.எனது மகன் சிவலிங்கம் ஆரூரன் 2008 ஆம் ஆண்டு கொழும்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது கொழும்பு மகசின் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை.எனது மகன் சிறந்த எழுத்தாளன்,இதுவரை 5 நாவல்கள் மற்றும் ஒரு சிறு கதை எழுதியுள்ளார்.
அதற்கு அவருக்கு விருதுகளும் கிடைத்துள்ளது.இப்போதும் சிறையில் அவர் எழுதிக்கொண்டு தான் இருக்கின்றார் – என்றார்.
அரசியல் கைதிகள் குடும்பத்துடன் இணைய வேண்டும் என பிரார்த்தித்து, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் ‘விடுதலை பொங்கல்’ நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில், மக்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.