12 ஆம் வகுப்பில் படிக்கும் மெலனி சுரேஷ்குமார், வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கு (2022/23) தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
வட அமெரிக்காவில் உள்ள எல்லா பல்கலை கழகங்களும் தங்களது பல்கலைக்கழக விளையாட்டு அணிக்கு திறமையான வீரர்களை வடிகட்டி எடுப்பது வழமை.
பல்கலைக்கழகங்களிலே கல்வி பயிலும் மாணவர்களில் இருந்து விளையாட்டு வீரர்களை தெரிவு செய்வது பொதுவான நடைமுறை . ஆனால் இங்குள்ள பல்கலை கழகங்கள் திறமையான சில உயர்வகுப்பு மாணவர்களை உயர்கல்வி படிக்கும்போதே தெரிவு செய்வது இங்குள்ள இன்னுமொரு சிறப்பு.
விளையாட்டில் மாகாண, தேசிய ரீதியான திறமையான உயர் வகுப்பு மாணவர்களை பல்கலைக்கழகம் செல்லுமுன்னர், உயர் வகுப்பிலேயே பல பல்கலைக்கழகங்கள் உள்வாங்கி விடும் . அவர்களுக்கு புலமைப்பரிசில் கிடைக்கும் சந்தர்ப்பமும் உண்டு
இந்த வகையில் கனடாவின் உயர் தராதரம் கொண்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றான வாட்டர்லூ பல்கலை கழகத்தின் பெண்கள் உதைபந்தாட்ட அணியில் இடம் பெறும் வீராங்கனையாக ஒரு தமிழிச்சி, மெலனி சுரேஸ்குமார் இடம் பிடித்துள்ளார் .
அவர் உதைபந்தாட்டத்தில் மென்மேலும் உயர்வடைய வாழ்த்துகின்றோம் .