செல்லத்துரை வீதி சங்கரத்தையைச் சேர்ந்த கஜனாதன் துளசி அவர்கள் மூன்று பிள்ளைகளுடன் கணவன் அன்றாட தொழில் செய்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தனது மகன் கஜனான் கபிராஜ் வட்டு இந்து கல்லூரியில் தரம் 09 இல் கல்வி கற்று வரும் நிலையில் அவர் பாடசாலை சென்று வருவதற்கு துவிச்சக்கர வண்டி ஒன்றினை தந்துதவுமாறு கிராம உத்தியோகத்தார் ஊடாக வட்டுக்கோட்டை இந்து சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் ரூபா 30,000 பெறுமதியில் புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றும், கற்றல் உபகரணங்களும் மாணவனுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.