கனடா- மிசிசாகாவில் வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்த தமிழர் ஒருவரின் மரணத்தில் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவர்கள் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
35 வயதுடையவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழரான இவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு, மிசிசாகா பிராந்திய பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 17ஆம் திகதி, மிசிசாகா நகரில் இடம்பெற்ற விபத்தில் 35 வயதுடைய சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர்உயிரிழந்தார். கனடாவின் மார்க்கம் நகரில் வசித்து வந்த சேர்ந்த இவர் வீதியை கடந்து தனது வாகனத்திற்கு சென்ற போது வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு,படுகாயமடைந்தார்.
விபத்தில் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, டிசெம்பர் 24ஆம் திகதி மரணமானார். இந்நிலையில் அவரை மோதிய வாகனத்தின் சாரதி, அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மோதிய வாகனத்தின் சாரதியை அடையாளம் காணும் முயற்சியில் சந்தேகத்தின் பேரில் வாகனம் ஒன்றின் படம் பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான தகவல், பாதுகாப்பு கெமரா அல்லது வேறேதும் காணொளி பதிவுகள் இருப்பவர்கள், பொலிஸ் அல்லது குற்றத் தடுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுமாமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உயிரிழந்த சுரேஸ் தர்மகுலசிங்கம் யாழ்ப்பாணம் நுணாவில் மேற்கை சொந்த இடமாக கொண்டவர் எனவும் , கடந்த 2010ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்ததுடன் , கனடாவில் சரக்குகளை ஏற்றும் ‘ட்ரக்’ சாரதியாகவும் பணியாற்றி வந்தார் எனவும் பொலிசார் அறிவித்துள்ளனர்
மேலும் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், இலங்கைக்குச் சென்று திருமணம் செய்து கொண்ட சுரேஸ் தர்மகுலசிங்கம், டிசம்பர் 11ஆம் திகதி கனடாவுக்குத் திரும்பிய நிலையில், சில நாட்களில் அவர் விபத்தில் உயிரிழந்துள்ளமை அவரது நண்பர்களுக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
My uncle was a very special person’: Family appeals for
information in fatal Mississauga hit-and-run
Family members of a 35-year-old victim killed in a hit-and-run in Mississauga remembered him Thursday as a kind, hard-working man, and appealed for the driver of the vehicle that struck him to come forward.
Peel Regional Police say Markham resident Suresh Tharmakulasingam was crossing Dundas Street East near Dixie Road on Dec. 17 around 9:15 p.m. from the north side of the road to the south side when he was hit by a black older-model Ford Escape.
He was taken to hospital with life-threatening injuries and died a few days later.
The driver who struck Tharmakulasingam fled the scene, police said.
“My uncle was a very special person for me,” Tharmakulasingam’s nephew, Ariz Manothkumar, told reporters Thursday at the scene of where the crash occurred.
“I don’t know what I’m going to do without him … He was always there for my birthdays, he was always there whenever I was sad and always brought me back up. He always made me happy…
“When I got news of when he was first in a car crash, all I had was questions: What happened? How did it happen? Is he OK? Did he die? What happened? After we got the news … that he died, I didn’t know what to feel. I was numb,” Manothkumar said. Tharmakulasingam just married at the end of October. His wife is in Sri Lanka, family members said.