கைக்குண்டு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட மருத்துவரின் மகன் தெரிவிப்பு
(20-01-2022)
பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒய்வுபெற்ற மருத்துவரின் மகன் பொலிஸார் நடந்துகொண்ட விதம் குறித்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பலவந்தமாகவீட்டிற்குள் நுழைந்த கிருலப்பனை பொலிஸார் சிசிடிவியில் பதியப்பட்டிருந்த தரவுகளை வலுக்கட்டாயமாக கொண்டு சென்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற மருத்துவர் வீட்டில் துப்பாக்கிகளையும் வாள்களையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு கைத்துப்பாக்கிகளையும் ஒருரிவோல்வரையும் இரண்டுவாள்களையும்,ஒரு கத்தியையும் துப்பாக்கியொன்றையும் பிலியந்தலையில் உள்ள வீட்டிலிருந்து மீட்டதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவரின்மகன் ஒஸ்கலா ஹேரத் திங்கட்கிழமை வீட்டிற்குள்நுழைந்தபொலிஸார் அங்கிருந்தஅனைவரினதும் கையடக்க தொலைபேசிகளை பறித்தனர் என தெரிவித்துள்ளார்.
எங்களை எங்கள் அறைக்குள் செல்லுமாறு கேட்டனர்,எனது தந்தை ஓய்வுபெற்ற மருத்துவர்-என்னிடம் இரண்டு பென் டிரைவ்கள் காணப்பட்டன – பொலிஸார் வங்கிக்கணக்குகள் குறித்தஅனைத்துவிபரங்களையும்பதிவுசெய்தனர்.
எனது கணிணி யின் கடவுச் சொற்களைபெற்றுக்கொண்டனர் என அவர்தெரிவித்துள்ளார்.
கையடக்க தொலைபேசிகளையும் ஏனைய விபரங்களையும் பெற்றமைக்கான ஆவணங்களை அவர்கள் வழங்கவில்லை என அவர்தெரிவித்துள்ளார்.
எங்கள் வீட்டில் ஆயுதங்கள் துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என ஊடகங்களில் வெளியான தகவல்களை நான் பார்த்தேன் ஆனால் எனது வீட்டில் எனது சிறுவயது விளையாட்டு துப்பாக்கிகளே காணப்பட்டன.
சில எயர் ரைபில் துப்பாக்கிகளும் பரிசாக கிடைத்த வாள்களும் காணப்பட்டன என அவர்தெரிவித்துள்ளார்.
நடந்தது அனைத்தும் சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டிருந்தது- ஆனால் கிருலப்பனை பொலிஸ் உத்தியோகத்தர் பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்து சிசிடிவிதரவுகளை எடுத்துச்சென்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் எனது சகோதரியிடமிருந்து பலவந்தமாக எங்கள் விருப்பத்தின் படி சிசிடிவி பதிவுகளை எடுத்துள்ளதாக வாக்குமூலத்தை பெற்றார்-எனவும் வைத்தியரின் மகன் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள தந்தையை பார்ப்பதற்கு எங்கள் சட்டத்தரணிகளை பொலிஸார் அனுமதிக்கவில்லை என அவர்தெரிவித்துள்ளார்.
மனிதஉரிமை ஆணைக்குழுவிற்குஇது குறித்துமுறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்