தற்போது ஒன்றாரியோவில் அமுல் செய்யப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறப்பதும்; வகுப்பறைகளில் மாணவர்கள் நேரடியாக கல்வி கற்பது தொடர்பாக எமது கல்வி அமைச்சு தனியாக முடிவுகளை எடுக்கவில்லை. சுகாதார அமைச்சு அதன் கீழ் வரும் மாகாண தலைமை சுகாதார அதிகாரி மற்றும் பல அறிஞர்கள் கொண்ட பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் கொண்ட குழுவே தீர்மானித்தது என்கிறார் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெட்சே நேற்று வியாழக்கிழமையன்று மதியம் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோரை இணையவழி ஊடாக சந்தித்து உரையாடியபோதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜேய் தணிகாசலம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த தமிழ் ஊடக நிறுவனங்கள் உடனான பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது மார்க்கம் தொகுதி மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் கலந்து கொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஆங்கு ஆரம்ப உரையாற்றிய கல்வி அமைச்சர் அவர்கள் முதலில் தனது சகாக்களான மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்த பின்னர். ஒன்ராறியோ மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும்போது இரண்டு விரைவான ஆன்டிஜென் சோதனைகளைப் பெறறுக்கொள்ளும் வகையில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், ஆனால் அது தவிர, கோவிட்-19 தொற்றுநோய்களின் ஓமிக்ரான் தொற்று பரவலுக்கு முமத்தியில் பாடசாலைகளை பாதுகாப்பாக வைத்திருக்க தமது அமைச்சு முன்னர் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளை தீவிரமாக அறிமுகம் செய்துள்ளது என்றும் உறுதியாகத் தெரிவித்தார்..
அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ஒன்றாரியோ மாகாண சுகாதார தலைமை அதிகாரியின் அலுவலகத்தின் வழி நடத்தலும் எமது அமைச்சின் பாடசாலை மீள் திறப்பு நடவடிக்கைகளுக்கு நன்கு ஊக்கமளிக்கின்றன. அவர்களின் நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் எமக்கு நம்பிக்கைகளை ஊட்டி நின்றன. எமது முதல்வர் அவர்களும் போதிய நிதியை ஒதுக்கித் தந்துள்ளார். எனவே தற்போது ஓன்றாரியோ மாகாணப் பாடசாலைகளில் நடைபெறும் வகுப்பறை கற்றல் நடவடிக்கைகள் தகுந்த பலனைப் பெற்றுத் தரும் என்று நம்புகின்றேன்” என்றார் தொடர்ந்து தமிழ் ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் பிரதம ஆசிரியர்கள் ஆகியோரின் கேள்விகளுக்கும் உற்சாகமாக பதிலளித்தார் மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெட்சே அவர்கள்
கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெஸ், மாகாணத்தில் “வலுவான பாதுகாப்புகள்” உள்ளன, அவை “முழுமையாக ஆதரிக்கப்படுகின்றன” என்று தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கீரன்மூர் கூறினார்.