(மன்னார் நிருபர்)
(01-02-2022)
மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் மன்னார் மாவட்டத்திற்கு பருவ காலங்களில் வருகை தரும் வெளிநாட்டு பறவைகளை பார்வையிடுவதற்காகவும் பறவைகள் பார்வை கோபுரம் இன்று(1) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
யு.என்.டி.பி. நிதி அனுசரணையில் 7.மில்லியன் ரூபா செலவில் 35 அடி உயரத்தில் அமைக்கப்பட மன்னார் பிரதான பாலத்திற்கும் தள்ளாடி சந்திக்கும் இடையில் உள்ள வங்காலை பறவைகள் சரணாலயம் பகுதியில் அமைக்கப்பட்ட பறவைகள் பார்வை கட்டிடக் கோபுரத்தினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் மற்றும் யு.என். டி.பி யின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ரொபேர்ட் ஜுக்கம் , சுற்றுச்சூழல் அமைச்சின் சார்பாக வருகை தந்திருந்த இணைப்பாளர் சாணக்க மகேனி , பறவைகள் சரணாலயம் திணைக்களத்தின் பணிப்பாளர் மஞ்சுள அமரரத்ன ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்
மேலும் இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் , மன்னார் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ வனவளத் திணைக்களம் மற்றும் பறவைகள் சரணாலய திணைக்களத்தின் அதிகாரிகள் யு.என்.டி.பி அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.