(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
கோவிட்- 19 தடுப்பூசியை கனடியர்கள் அனைவரும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிபந்தனையை மீறியதோடு மட்டுமன்றி கனடிய பாராளுமன்றம் அமைந்துள்ள ஒட்டாவா மாநகரை பல்வேறு வழிகளிலும் ஸ்தம்பிதம் அடையச் செய்துள்ள ‘சுதந்திர ஊர்வலம்’ என்ற அணியினரின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அரசாங்கத்தையும் ஒட்டாவா வாழ் பொதுமக்களையும் ‘சினம்’ கொள்ள வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி ‘சுதந்திர ஊர்வலம்’ என்ற பெயர் சூட்டப்பெற்ற இந்த போராட்ட அணியினரில் பெரும்பகுதியினர் ஒன்றாரியோ மாகாணத்தில் கனரக வாகனங்கள் சாரதிகளாகவோ அன்றி கனரக போக்குவரத்து ‘ட்ரக்’ களை சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனங்களாக உள்ளதாகவும் இவர் அரசாங்கத்தின் தடுப்பூசி செலுத்தும் சட்டத்திற்கு கட்டுப்படாமல் இருந்து பின்னர் சட்டத்தை நீக்கும் வகையில் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்கவும் குறிப்பாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அவமானங்களை ஏற்படுத்தவுமே இந்த ‘சுதந்திர ஊர்வலம்’ ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அரசாங்க புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தேசிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ள இவ்வேளையில் ஒட்டாவா மாநகரின் பாராளுமன்ற வளாகத்தினுள் சற்றும் எதிர்பாராத வகையில் அரசியல் பதவிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
‘சுதந்திர ஊர்வலம்’ என்ற போராட்ட வடிவத்தை ஏற்பாடு செய்தவர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அகற்ற முயன்ற வண்ண்ம் ஒட்டாவாவிற்குள் நுழைந்தனர் என்றும் ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் கன்சர்வேடிவ் தலைவரைப் பழிவாங்க வேண்டியதாயிற்று என்றும் அரசியல் விமர்சகர்கள் தங்கள் பத்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறாக எதிர்க்கட்சித் தலைவரை திடீரென நீக்கியதன் மூலம், தற்போது ஒட்டாவாவை ஆக்கிரமித்துள்ள “சுதந்திர ஊர்வலம்” என்று அழைக்கப்படும் அணியினர் உண்மையில் பிரதமர் ட்ரூடோவுக்கு அவர்களுக்கு ஒரு பரிசை வழங்கியுள்ளார்கள் என்றும் கருத்துக் கூறப்பட்டுள்ளது
இந்தப் பரிசானது ட்ரூடோ அவர்களின் அரசாங்கம் சிறிது காலத்திற்கு பதவி இழக்கச் செய்வதிலிருந்து தவிர்க்கப்பட்டுள்ளுத என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் பதவியை அதே கட்சியைச் சேர்ந்தவர்களே பறித்து விட்டார்கள் என்றும் இது “சுதந்திர ஊர்வலத்தின் வெற்றி,” என்றும் அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான கீன் பெக்ஸ்டே அறிவித்தார், இவ்வாறான நிலையில் ‘சுதந்திர ஊர்வலம்’ ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிக்கொண்டுள்ளவர்கள் நூற்றுக்கணக்கில் ஒட்டாவா மாநகரில் பல வீதிகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள இந்த வேளையில் ஒட்டாவா மாநகருக்கான பொலிஸ் திணைக்களத்தின் தலைவரான பீற்றர் சிலோளி அவர்கள் கடந்த ஆறு நாட்களாக தனது கனிஸ்ட அதிகாரிகளோடும் மாநகர மேயர் மற்றும் கவுன்சிலர்களோடும்.
ஆலோசனைகளை நடத்திய பின்னர் அரசாங்கம் இந்த ‘சுதந்திர ஊர்வலம்’ ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டவர்களோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அல்லது வேறு வழிகளில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒட்டாவா மாநகரை விட்டு வெளியேறச் செய்து ஓட்டாவா மக்களையும் பாராளுமன்ற வளாகத்தையும் விடுவிக்கவும் வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.