எமது நாட்டின் பொருளாதாரத்தையோ, அல்லது நமது ஜனநாயகத்தையோ அல்லது நமது சக கனடியர்களின் அன்றாட வாழ்க்கையையோ முடக்க எவருக்கும் உரிமை இல்லை என்றும் அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் கனடியப் பிரதமர் ட்ரூடோ தனது சமூக ஊடகப் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
கனடாவில் அரசாங்கத்தின் கோவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக இடம்பெறும் கனரக வாகன சாரதிகளின் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவது குறித்து தனது கருத்தைப் பதிவிட்ட போதே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில், கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான கட்டுப்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஓட்டாவா மாநகரத்தில் கனரக டிரக் சாரதிகளும் மற்றுமு; தடுப்பூசி எதிர்ப்பாளர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, நேற்று, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒட்டாவாவில் கோவிட் தடுப்பூசி சட்டங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் கனரக வாகனங்களின் போராட்டங்கள் “நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.
பொருளாதாரம் மற்றும் உள்ளூர்வாசிகள் மீதான ஆர்ப்பாட்டங்களின் தாக்கத்தை மேற்கோள் காட்டி. அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு, ஆனால் “பொருளாதாரத்தை அல்லது நமது ஜனநாயகத்தை முற்றுகையிடும் உரிமை” இல்லை என்று உறுதியாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், தொடர் இதுவரை, நூற்றுக்கணக்கான ஆர்சிஎம்பி பொலிஸ் அதிகாரிகள் ஒட்டாவா பொலிஸ் சேவைகளுக்கு ஆதரவாக அணிதிரட்டப்பட்டுள்ளனர் என்றும் எங்களின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்த மாநகர கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகிறோம், மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான அனைத்து ஆதாரங்களுடனும் நாங்கள் தொடர்ந்து இருப்போம்” என்று கூறினார். மேலும் “கனடா வாழ் மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், தங்கள் அரசாங்கத்துடன் உடன்படாமல் இருக்கவும், தங்கள் உரிமைகளைக் கேட்கவும் அதிகாரம் உண்டு. அந்த உரிமையை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம். என்றும் கனடியப் பிரதமர் தெரிவித்தார்.