கனடாவின் ஏஜெக்ஸ் நகரில் ஒரு தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகளையும் கொலை செய்த குற்றச்சாட்டில் விசாரணையை நீண்ட காலமாக எதிர்கொண்ட ஓரு நபருக்கு தீர்ப்பு வழங்கப்படும் நாள் மார்ச் மாதம வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் நடந்த இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள 33 வயது கோர்னி பென் என்பவர் மீதான மூன்று கொலை வழக்குகளும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அரச தரப்பு வழக்கறிஞர்கள் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வாதிட்டனர்.
அரசு தரப்பு முன்வைத்துள்ள வாதத்தில், 2018 மார்ச் மாதம் 14ம் திகதி கொலையாளி கோர்னி பென் இந்த மூன்று கொலையையும் செய்துள்ளார் என்றே குறிப்பிட்டுள்ளது. 39 வயதான கிராஸ்மிரா என்னும் பெயர் கொண்ட அந்த தாய் தன்னுடனான உறவை முறித்துக்கொண்ட ஆத்திரத்தில், அவரையும் அவர் பிள்ளைகள் இருவரையும் கோர்னி பென் கொலை செய்துள்ளார்.
குறித்த தாயாரும் மகளும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். என்றும் 15 வயது சிறுவன் ராய் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்றும் பொலிஸ் விசாரணைகள் மற்றும் வைத்திய அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால், அந்த குடும்பத்தை கொலை செய்யும் அளவுக்கு தமக்கு துணிவு இல்லை என கொலையாளி கோர்னி பென் குறிப்பிட்டுள்தை நீதி மன்றம் ஏற்கவில்லை என்றும் அவர் தனக்காக எந்தவொரு சட்டத்தரணியை யும் வைத்துக் கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதே வேளை அரசாங்கத்தின் செலவில் நீதிமன்றம் ஏற்பாடு செய்த சட்டத்தரணி இந்த வழக்கு தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், அந்த நபரே மூன்று கொலையும் செய்துள்ளதை நிரூபிக்கும் தடயங்கள் பல உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தமக்கான வாதங்களை அந்த நபரே முன்வைத்து வந்துள்ளார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தாமதமாகிவந்த தீர்ப்பு இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதால் ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.