ரொறன்ரொவில் தடுப்பூசி செலுத்தும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்திற்கு அருகில் போராடச் சென்ற தாயார் மரணத்தை தழுவியதால் ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரிக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்ட அவரது மகள் ஒருவரின் செயற்பாடுகள் தேசிய ஊடகங்களை கவர்ந்துள்ளன என அறியப்படுகின்றது
சனிக்கிழமையன்று டொராண்டோ டிரக்கர் போராட்டத்திற்காக ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்திற்கு அருகில் கூடியிருந்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்ற தலைப்பில் அவர் கைகளில் எடுத்துச் சென்ற பதாகைகளும் துண்டுப்பிரசுரங்களும் பகிரங்கமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
“என் அம்மா கோவிட் நோயால் இறந்துவிட்டார்,” “முட்டாள்களே இனியாவது தடுப்பூசி போடுங்கள்.” என்று லெஹ்ரர் என்னும் அந்தப் பெண் தனது பதாகைகளில் தெரிவித்துள்ளார்