(மன்னார் நிருபர்)
(11-02-2022)
மன்னாரில் சமுதாய சீர்திருத்த கட்டளையாளர்களுக்கான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை 11 .30 மணி அளவில் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
-மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) அத்தியாவசிய உலர் உணவுகள் அடங்கிய உலர் உணவு பொதி மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.அனஸ், மாந்தை மேற்கு சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.பார்த்தீபன், மன்னார் நகர பிரதேச சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.இருதயராஜ் மற்றும் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்கள் இணைந்து தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளர்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.