(14-02-2022)
ஊடகவியலாளர் வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதலை ஐக்கியதேசிய கட்சி கண்டித்துள்ளது.
இன்று(14) அதிகாலை ஊடகவியலாளர் சமுடித சமரவிக்கிரமவின் வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதல் குறித்து கவலையடைந்துள்ளதாக ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் வன் முறைக்குள்ளாகாத நிலையை உறுதிசெய்வதே 2015இல் ஐக்கியதேசிய கட்சி அரசாங்கத்தின் நோக்கமாக விளங்கியது ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஊடகத்துறையினர் மீது தாக்குதலை மேற்கொண்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் ஊடகதுறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நாம் முடிவிற்குகொண்டுவந்தோம் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையை அச்சுறுத்திய பயங்கரமான கடந்தகாலத்தை இந்த தாக்குதல் கவலையளிக்கும் விதத்தில் நினைவுபடுத்துகின்றது எனவும்ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து விரைவான முழுமையான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் இதற்கு காரணமானவர்களை கைதுசெய்து இந்த நாட்டின் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தவேண்டும் எனவும் ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.