இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 16.02.2022 புதன்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது.
தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற சந்தான கோபால யாகம்
சந்தான கோபால யாகம் பலன்கள் :
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு ஏற்படுகின்ற காலசர்ப தோஷம், சர்ப தோஷம், பித்ரு தோஷம், குலதெய்வ சாபம் போன்ற பல்வேறு தோஷங்கள் நீங்கி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி சந்தான கோபால யாகமும், ஸ்ரீகிருஷ்ணருக்கு தொட்டில் பூஜையும் நடைபெற்றது.
ஆண்கள் திருமணத் தடை நீக்கும் கந்தர்வ ராஜ ஹோமம்
கந்தர்வ ராஜ ஹோமம் பலன்கள் :
திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு உள்ள செவ்வாய் தோஷம், சுக்கிர தோஷம், களத்திர தோஷம், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வ ராஜ ஹோமமும், கலசாபிஷேகம் நடைபெற்றது.
பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம்
சுயம்வர கலா பார்வதி ஹோமம் பலன்கள் :
இன்று நடைப்பெற்ற சுயம்வரகலா பார்வதி ஹோமத்தில் மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், வசீகர தோஷம், போன்ற எல்லாவிதமான திருமணத் தடைகளும், தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழவும், மனைவிக்கு ஏற்ற கணவர் அமையவும். அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கலந்து கொண்ட பெண்களுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. முன்பாக ஸ்ரீ மஹா கணபதி பிரார்த்தனையும் 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜையும் சர்ப தோஷங்கள் நீங்க, ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.
மேற்கண்ட முப்பெரும் யாகங்களில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வத்தித்து பிரசாதம் வழங்கினார் தொடர்ந்து அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.