கியூபெக் மாநிலம், Dollar – Des – Ormeaux நகர பிதா திரு. Alex Battausci (MBA) அவர்களுக்கு கனடா உலகத்தமிழ் பண்பாட்டுக் கழகம் பாராட்டுப் பத்திரம் வழங்கியது.
கனடா-வாழ் தமிழர்கள் ஆண்டுதோறும் தைத்திங்கள், பொங்கல் நாளை “தமிழர் மரபு தினம்” எனக் கொண்டாடி வருவதும், தை மாதத்தை கனடாவில் உள்ள மத்திய அரசாங்கம் மற்றும் பல மாநில அரசாங்கங்கள் மற்றும் உள்ளாட்சி அமைபப்புக்கள் ஆகியன தமிழர் மரபு மாதமாக அங்கீகரித்தன. அத்துடன் ஒனராறியோ மாநில அரசும் இந்த மாதத்தை விசேடமாக அறிவிப்புச் செய்யதுள்ளமை நாம் அறிந்த செய்தியாகும்.
கியூபெக் மாநில நகரங்களில் ஒன்றான DDO என்று சுருக்கமாகச் சொல்லப்படும் நகரமான Dollar-des-Omeaux நகர பிதாவான உயர்திரு. அலெகன்ஸ் பொட்டாச்சி அவர்களது நகரசபை அங்கத்தினர்கள் அனைவரும் இந்நகரில் வாழும் தமிழர் சமூகத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழர் மரபு நாளை நகரசபை நிர்வாகம் அங்கீகரித்தமை பெருமை தரும் நிகழ்வாகும்.
இதன் பொருட்டு நகரபிதா அவர்களுகு கடந்த பெப்ரவரி சனிக்கிழமை, 12.02.2002, மாலை மொன்றியால் அருள்மிகு திருமுருகன் கோயில் கல்யாண மண்டபத்தில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. (கோவயில்) சைவ மகாசபை செயலாளர் திரு.நடராஜா வாகீசர் அவர்கள் தலைமையில் இவ்விழா ஒழுங்கேறியது.
விழாவில் பிரதம சிவாச்சாரியார் ஸ்ரீ வெங்கடேஸ்வரக் குருக்கள் வாழ்த்துரை வழங்க, ரொரன்ரோவிலிருந்து வெளியாகும் “உதயன்” வாழ இதழின் பிரதம ஆசிரியரும் கனடா உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் கனடாக் கிளையின் தலைவருமாகிய திரு.ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்களுடைய சிறப்புரையுடன், பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக நகரபிதா அவர்களுகுக சிறப்பு நினைவுக் கேடயம் ஒன்று வழங்கி கௌரவம் செய்யப்பட்ட இந்நிகழ்வை பல தமிழ் அன்பர்கள் கலந்து பெருமை சேர்த்தார்கள்.
அங்கு உரையாற்றிய நகர பிதா Alex Battausci தனது உரையில் ” எமது நகரசபை எல்லைக்குள் வசிக்கும் தமிழ் மக்களும் கியுபெக் மாநிலத்தில் ஏனைய பிரதேசங்களில வாழும் தமிழ் மக்களும் இந்த மாநக சபைக்கும் மாநிலத்திற்கு அரிய சேவையாற்றி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று எமது நகரசபையின் அங்கத்தவர்கள் அனைவரும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
அத்துடன் கனடாவிலும் மொன்றியால் மாநகரிலும் தமிழ்ப் பண்பாட்டு முறைகள் மற்றும் தமிழ்க் கலைகளை வளர்த்து வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை எனக்களித்த பாராட்டுக்களை நான் நன்றியுடன் ஏற்றுக்கொள்கின்றேன். அத்துடன் இனிவரும் காலங்களிலும் இங்கு வாழும் தமிழ் மக்கள் எம்மிடம் விடுக்கின்ற வேண்டுகோள்கள் அனைத்தையும் நாம் நிறைவேற்றித் தருவோம் என்று உறுதி கூறுகின்றேன்” என்றார்.
தமிழ் அன்பர் “வீணைமைந்தன”, திரு. கே.ரி. சண்முகராஜாவின் வேண்டுக்கோளாக இனிவரும் காலங்களில் ’மரபு திங்கள் நினைவு’ கொண்டாட்ட நிகழ்வுகள் DDO நகரசபை கலையரங்களில் நடைபெற வேண்டும் எனும் விருபத்தை திரு.ஆர்.என். லோகேந்திர லிங்கம் நகர பிதாவிடம் எடுத்துரைக்க, நகரபிதா அக்கோரிக்கையை ஏற்றுப் பதில் வழங்கியது அங்கு கூடியிருந்தோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
செய்தியாளர்கள். Veenaimainthan and Arjune