வெந்தயம் என்பது காலம் காலமாக பயன்பட்டு வரும் ஒரு விதை ஆகும். இது சமையல் மற்றும் மருத்துவ செயற்பாடுகளில் பெரும் பங்களிக்கிறது. வெந்தயம் மூலம் பல நன்மைகளை நாம் அடையாளம். அவை எவை என பார்க்கலாம்
1. இதயநோயை குணப்படுத்துதல்
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும். மேலும் இதில் தேவையான அளவில் பொட்டாசியம் உள்ளதால், இதயத் துடிப்பு மற்றும் இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த இது உதவும்.
2. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெந்தயம் பெரிதும் உதவுகிறது. இயற்கையான கரையத்தக்க நார்ச்சத்து வெந்தயத்தில் உள்ளதால், சர்க்கரையை இரத்தம் உட்கொள்ளும் வீதம் குறையும். வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால், இன்சுலின் உற்பத்தியை அது தூண்டிவிடும்.
3. பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும்
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து அதாவது (சபோனின்ஸ், பசைப்பொருள் போன்றவைகள்) உங்கள் உணவுகளில் இருந்து உள்ளேறிய நச்சுத்தன்மையை, உங்கள் உடலில் இருந்து வெளியேற்றும். இது உங்கள் பெருங்குடலின் சீதப்படலத்தை புற்றுநோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
4. வெந்தயம் பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கச் செய்யும்
ஆகவே உடல் எடை குறைக்கும் டயட்டில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் படி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை மெல்லுங்கள். அதிலுள்ள இயற்கையான கரையத்தக்க நார்ச்சத்துக்கள், உங்கள் பசியை அடக்கிவிடும். இதனால் உணவை அளவோடு உடற்கொள்ளு பழக்கம் வரும்
5. சரும அலர்ஜி மற்றும் தழும்புகளுக்கான தீர்வு
அதாவது ஊற வைத்த சுத்தமான வெந்தயத்தில் இருந்து செய்யப்பட்ட பேஸ்ட்டை சரும சிகிச்சைகளுக்கு பயன்படுத்துங்கள். அதில் தீக்காயம், கொப்பளம், சரும படை போன்ற பிரச்சனைகள் அடக்கம். மேலும் தழும்புகளை நீக்கவும் வெந்தயம் உதவுகிறது.
6. தலைமுடி பிரச்சனைகளுக்கான தீர்வு
வெந்தயத்தை உணவோடு சேர்த்து கொண்டாலும் சரி அல்லது அதன் பேஸ்ட்டை தலைமுடியில் தடவிக் கொண்டாலும் சரி, உங்கள் தலைமுடியை பளபளவென கருமையாக்கும். தினமும் இரவு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்த வெந்தயத்தை கொண்டு, மறுநாள் காலை தலையில் மசாஜ் செய்தால், முடி உதிர்தலுக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். மேலும் பொடுகை விரட்டவும் வெந்தயம் பெரிதும் உதவும்.
7. வெந்தய விதைகள் மாதவிடாய் வலிக்கு ஓரு நல்ல தீர்வாகும்.
பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக குறைக்க ஊற வைத்த வெந்தய விதைகளை எடுத்துக் கொண்டு வரலாம்.
8. சீரண சக்தியை மேம்படுத்துகிறது
வெந்தயம் உங்கள் செரிமானத்திற்கு உதவுகிறது. அஜூரணம் போன்ற கோளாறுகளை போக்கி உணவு நல்ல செரிமானம் ஆக குடலியக்க செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
9. வெந்தயம் ஒரு ஆன்டிசிட்டாக செயல்படுகிறது
வயிற்றில் அமிலத்தன்மை உள்ளவர்கள் இரவில் 1 டீ ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்த வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் நெஞ்செரிச்சல், எதிக்களித்தல் போன்ற அமிலத்தன்மை பிரச்சினைகளை விரட்ட முடியும்.
10. கிட்னி பிரச்சணைக்கு உதவும்
சிறுநீரகத்தில் கற்கள் மற்றும் தொடர்ந்து எரிச்சல் உணர்வை சந்தித்து வந்தால் வெந்தயத்தை முதல் நாள் வெது வெதுப்பான நீரில் ஊர வைத்து சாப்பிட்டு வந்தால் சிறு நீரக எரிச்சல் மற்றும் கிட்னி பிரச்சணைகள் முற்றிலுமாக நீங்கும்.
– இரா சஹானா