யாழ் அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தினுடைய புதிய திறன்வகுப்பறைத் திறப்பு விழாவானது அண்மையில் கல்லூரி அதிபர் திரு.தி.பிரதீபன் அவர்களினுடைய தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம விருந்தினராக வலிகாம கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. பொ.ரவிச்சந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினரான தெல்லிப்பழை பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர் திரு. வை.சுரேஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ரட்ணம் அறக்கட்டளை நிறுவனத்தினுடைய அனுசரனையிலும் பாடசாலை பழைய மாணவரான திரு. சு.உருத்திரேஸ்வரன் (சுவிஸ்) அவர்களினுடைய பங்களிப்பினாலும் மாணவர் பயன்பாட்டிற்கு என திறந்து வைக்கப்பட்ட Smart Board ஆனது மாணவர்களுக்கு வீடியோக்கள், ஓடியோக்கள் மற்றும் இணையம் மூலம் பாடப்பரப்புகள் தொடர்பான பூரண அறிவைபெற உதவியாக இருக்கும் என்பதுடன் வறுமையான மாணவர்களுக்கு இணையவழிக் கற்றலுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பாடசாலையில் கல்விபயிலும் 90ற்கும் அதிகமான மாணவர்கள் இதன்மூலம் பயனடையபோகின்றார்கள் என்றும் பாடசாலை அதிபர் தனது உரையில் தெரிவித்தார்.
அத்துடன் நவீன சாதனங்களின் அறிமுகம் மாணவர் கற்றலுக்கு ஒரு ஊக்கியாக இருக்கின்றது என்றும் கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறான வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது கற்பித்தல் முறைகளிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்து கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கும் சம சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என்னும் பிரதம விருத்தினர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அத்துடன் இவ்விழாவிற்கு பெற்றோர்களும் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.