(மன்னார் நிருபர்)
(16-03-2022)
தேசிய சேமிப்பு வங்கியின் 50 ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் புதன் கிழமை (16) தேசிய சேமிப்பு வங்கியின் மன்னார் வங்காலை கிளையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வங்கியின் பிரதான முகாமையாளர் வெ.கோகுலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
காலை 7.30 மணிக்கு 50வது ஆண்டு விழா மங்கள ரீதியாக தேசிய மற்றும் வங்கி கொடியை அரசாங்க அதிபர் மற்றும் வங்கியின் முகாமையாளர் ஏற்றி வைத்து மங்கள விளக்கேற்றி மதத் திலைவரின் இறை ஆசியுடன் இடம் பெற்றது
குறித்த நிகழ்வில் பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.