மன்னார் நிருபர்
(16-03-2022)
மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களில் மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி நிகழ்வும் மன்னார் மாவட்ட கலாச்சார பேரவையின் பொதுக்கூட்டமும் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இன்று (16)மாலை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தின் கலை பண்பாட்டு வளர்ச்சிக்காக உழைத்து மறைந்த கலைஞர்களின் திரு உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது
பின்னர் மாவட்ட கலாச்சார பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் இடம் பெற்றது.
அதன்படி வருகின்ற ஜூன் மாதம் திருவள்ளுவர் விழாவும் ஆகஸ்ட் மாதமளவில் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழாவும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தின் கலைஞர்கள் வயதெல்லை அடிப்படையில் மூன்று பிரிவுகளாக மதிப்பளிக்கப் பட உள்ளார்கள்.
இந்த நிகழ்வில் பிரதி மாவட்ட செயலாளர் வே .சிவராஜா ,மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன் உட்பட பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்களும் கலைஞர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த 3 கலைஞர்களுக்கு உறுதிப்பத்திரம் மன்னார் மாவட்ட செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.