(மன்னார் நிருபர்)
(20-03-2022)
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறை முகத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழை படகு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை கரை ஒதுங்கியுள்ளது.
-மீனவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக கோடியக்கரை சுங்கத்துறை அதிகாரி கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரி உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த படகில் (OFRP-A-0851 KCH )என்ற இலக்கம் காணப்படுகின்றது.
குறித்த படகு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த படகா? அல்லது கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் படகா ? இப் படகில் யாரும் வந்தனரா ? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கியூ பிராஞ்ச் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.