கனடாவின் மத்திய கொன்சர்வேர்ட்டிவ் கட்சி தலைவராக பெற்றிக் பிரவுண் அவர்கள் வெற்றிபெற அக்கறையோடு உழைக்கத் தொடங்கியுள்ள கனடிய தமிழர் சமூகம்
கனடாவின் மத்திய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவராகவும் தொடர்ந்த அடுத்த கனடியப் பிரதமராகவும் மரியாதைக்குரிய பெற்றிக் பிரவுண் அவர்களின் வெற்றிக்காக உழைப்பதில் கனடிய தமிழர் சமூகம் மிகுந்த அக்கறையோடும் உற்சாசத்தோடும் உழைக்கத் தொடங்கியுள்ளது.
அந்தவகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பிக்ககரிங் மாநகரில் பரராசசிங்கம்- நிரோதினி பரராசசிங்கம் தம்பதியின் இல்லத்தில் இடம்பெற்ற மரியாதைக்குரிய பெற்றிக் பிரவுண் அவர்களுடனான கலந்துரையாடலில் பல நண்பர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
செய்தியும் படங்களும்; கணேஸ்- கனடா உதயன்