(24-03-2022)
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் விக்டோரியா நியுலாண்ட் , இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
உலகின் மிக முக்கிய கடல் பாதையில் அமைந்துள்ள இலங்கை இந்தோ பசுபிக் பிராந்தியத்திலும் சர்வதேச வர்த்தகத்திலும் மிக முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது .
இலங்கையும் அமெரிக்காவும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என ஆராய்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு உதவி இராஜாங்க செயலாளருடன் விஜயம் மேற்கொண்டேன் என தூதுவர் ஜூலி சங் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து ஆராய்வதற்காக எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் – இந்து சமுத்திரத்தின் மிகப்பெரிய மும்முரமான கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டேன் என விக்டோரிய நுலாண்ட் தெரிவித்துள்ளார்.