‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நூல் வெளியீட்ட விழாவில்’ சிந்தனைப் பூக்கள்’ பத்மநாதன் புகழாரம்
“கனடாவில் கடந்த 29 வருடங்களாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் உலகெங்கும் இயங்கும் இலக்கிய அமைப்புக்களின் மத்தியில் தனித்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இந்த வெற்றிகரமான அமைப்பு உலகின் பல நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்களின் பரிசு பெற்ற சிறுகதைகளை தொகுத்து சாதனை புரிந்துள்ளது. இதற்காக கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டுக்குரிய ஒரு இலக்கிய அமைப்பு என்ற வகையில் கனடா வாழ் தமிழ் மக்கள் அமைப்புக்கள் அதனைப் பாராட்ட வெண்டும்”
இவ்வாறு இன்று ஞாயிற்றுக்கிழமை 17ம் திிகதி கனடாவில் இயங்கிவரும் ‘பைரவி நுண்கலைக் கல்லூரி கலையரங்சில் நடைபெற்ற கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நூல் வெளியீட்ட விழாவில்’ உரையாற்றிய சிந்தனைப் பூக்கள்’ பத்மநாதன் புகழாரம் சூட்டினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தை 29 வருடங்களுக்கு முன்னர் நிறுவிய மொன்றியால் வாழ் எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ அவர்கள் உட்பட பலர் பாராட்டுக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் விதைத்த விதை இன்று ஓரு விருட்சமாக வளர்ந்துள்ளது. எனவே தற்போது எழுத்துலகில் கால் பதித்தவர்கள் இந்த அமைப்போது இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றேன்’ என்றார்.
எழுத்தாளர் இணையத்தின் தலைவர் குரு அரவிந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வரவேற்புரையை இணையத்தின் செயலாளர் ஆர். என். லோகேந்திரலிங்கம் நிகழ்த்தினார்.
இன்றைய தினம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறப்புக் கௌரவத்தைப் பெற்ற திருவாளர்கள் கவிஞர் அகணி சுரேஸ்.’ ‘சிந்தனைப் பூக்கள் எஸ். பத்மநாதன் மற்றும் தமிழ் நாட்டிலிருந்து தற்பொழுது கனடாவிற்கு வருகை தந்துள்ள இலக்கியவாதி திருமதி அண்ணாமலை தமிழரசி ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் ஒன்றாரியோ மாகாண சபையின் ஸ்காபுறோ தென்-மேற்கு தொகுதியின் உறுப்பினர்- என்டிபி கட்சியின் பிரதான பேச்சாளர் ( MPP DOLY BEGUM) திருமதி டொலி பேகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.
விழாவில் மொன்றியால் மாநகரிலிருந்து வருகை தந்த ‘வீணைமைந்தன்’ மற்றும் கவிஞர் கணபதி ரவீந்திரன் தமிழ் நாட்டிலிருந்து தற்பொழுது கனடாவிற்கு வருகை தந்துள்ள இலக்கியவாதி திருமதி அண்ணாமலை தமிழரசி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
சிந்தனைப் பூக்கள்’ பத்மநாதன் அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்தினார்.
சிறுகதைத் தொகுதியின் முதற் பிரதியை கனடா கவிஞர் கழகத்தின் தலைவர் அவர்கள் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் குரு அரவிந்தன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பல அன்பர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் பிரதிகளைப் பெற்றனர்.
எழுத்தாளர் இணையத்தின் நிர்வாக சபை உறுப்பினர் அருட்கவி ஞானகணேசன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.