(20-04-2022)
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் இன்று (20) மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள பட்டுள்ளதாகவும்,இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை எதிர்த்து இன்று முதல் ஒரு வாரம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் 300-க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் சம்மேளனம் என்பன அறிவித்துள்ளன.
ஆசிரியர் தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பெரும்பாலான ஆசிரியர்கள் இன்று பாடசாலைகளுக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே பெற்றோல் விலையேற்றத்தை கண்டித்து இன்றைய தினம் மாட்டுவண்டியில் பாடசாலைக்குச் சென்று தெல்லிப்பழை -யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.