மன்னார் நிருபர்
(22-04-2022)
2022ம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தில் அதிபர் செபஸ்தியான் ராஜேஸ்வரன் பச்சேக் தலைமையில் இன்று (22) காலை இடம்பெற்றது.
குறித்த பாடசாலையில் தரம் 1 இற்கு புதிதாக சேர்க்கப்பட்ட 100 மாணவர்கள்
சமய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆசிரியர்களின் ஆசி பெற்று பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் தரம் 2 மாணவர்களினால் மலர் செண்டு வழங்கி கைகுலுக்கி வரவேற்கப்பட்டார்கள்.
இதனையடுத்து பாடசாலை அரங்கு மண்டபத்தில் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக மன்னார் கோட்டக்கல்வி பணிப்பாளர் பர்னாந்து சந்தியாகு மற்றும் சமய தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பாடசாலையில் தரம் ஒன்றிற்கு 100 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பாடசாலையை மன்னார் மாவட்டத்தில் சுமார் 600 மாணவர்களைக் கொண்ட அதிகூடிய ஆரம்ப பிரிவு பாடசாலை என்பது குறிப்பிடதக்கது.